- Advertisement 3-
Homeவிளையாட்டுமேக்ஸ்வெல் ஆடாமல் போனதன் பின்னால் இருந்த எமோஷனல் காரணம்.. இவரு உண்மையாவே லெஜண்ட் தான் சாமி..

மேக்ஸ்வெல் ஆடாமல் போனதன் பின்னால் இருந்த எமோஷனல் காரணம்.. இவரு உண்மையாவே லெஜண்ட் தான் சாமி..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த வெளிநாட்டு வீரர் தான் மேக்ஸ்வெல். இவர் கடந்த மூன்று சீசன்களாக பெங்களூர் அணிக்காக மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன் மட்டுமில்லாமல், தேவைப்படும் நேரத்தில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார்.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையிலும் பட்டையை கிளப்பி இருந்த மேக்ஸ்வெல்,

மூன்று சீசன்களில் முறையே 513 ரன்களும், 301 ரன்களும், 400 ரன்களும் பெங்களூரு அணிக்காக எடுத்திருந்தார். ஆனால், இந்த சீசனில் அவர் ரன் சேர்க்கவே கடுமையாக தடுமாறி வருகிறார். பந்து வீச்சிலும் பெரிதாக ஜொலிக்காமல் இருக்கும் மேக்ஸ்வெல் இதுவரை ஒரு போட்டியில் கூட 30 ரன்களை தாண்டவில்லை. ஏறக்குறைய மூன்று போட்டிகளுக்கும் மேலாக பத்து ரன்களுக்குள் அவர் அவுட்டாகி இருந்தது கடுமையான விமர்சனத்தையும் சந்தித்திருந்தது.

இதனால் மேக்ஸ்வெல்லுக்கு எதிரான குரலும் ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் இருந்தே கிளம்ப ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணியில் இடம் பெறவும் இல்லை. அதே வேளையில் அவருக்கு பதிலாக உள்ளே வந்த பெர்குசனும் பந்து வீச்சில் அதிகமாக ரன்களை கொடுத்திருந்தார். பெங்களூரின் முடிவு பல தரப்பிலான கருத்துக்களையும் பெற்று வந்த நிலையில் தான் இதற்கு காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

- Advertisement 2-

முதல் ஆறு போட்டிகளில் பெரிதாக ரன் சேர்க்காமல் இருந்த மேக்ஸ்வெல், தானாக முன்வந்து ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாள் இரவில் பாப் டுப்ளசிஸ் மற்றும் அணியின் பயிற்சியாளரை சந்தித்து தனக்கு பதிலாக வேறு வீரருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தன்னால் பேட்டிங்கில் பெரிய பங்களிப்பை அளிக்க முடியாததால் வேறு வீரருக்கு வாய்ப்பை கொடுக்கலாம் என்றும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதால் இது போன்ற முயற்சிகளை செய்து பார்ப்பதே சரியாக இருக்கும் என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

மேலும் மற்ற வீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் அது சிறப்பாக இருக்கும் என்றும் தேவைப்படும் நேரத்தில் தான் மீண்டும் அணியில் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதனால், இன்னும் சில போட்டிகளில் மேக்ஸ்வெல் ஆடாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தான் ஃபார்மில் இல்லை என்பதை உணர்ந்து தானே முன்வந்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மேக்ஸ்வெல் எடுத்த முடிவு பலரையும் மனமுருக வைத்துள்ளது.

சற்று முன்