- Advertisement 3-
Homeவிளையாட்டுமுதல் பந்தில் ருத்துராஜ் அவுட் ஆனதும்.. 15 வருஷம் கழித்து ஆர்சிபி அணியில் நடந்த அற்புதம்..

முதல் பந்தில் ருத்துராஜ் அவுட் ஆனதும்.. 15 வருஷம் கழித்து ஆர்சிபி அணியில் நடந்த அற்புதம்..

- Advertisement 1-

இந்த ஐபிஎல் தொடரிலேயே ரசிகர்கள் பலரையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்த போட்டி என நிச்சயம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதி இருந்த கடைசி லீக் போட்டியை சொல்லலாம். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிச்சயம் இந்த போட்டிக்கு நடுவே மழை பெய்யும் என வானிலை அறிக்கை வெளியாக, ரசிகர்கள் மத்தியில் சிறிய பரபரப்பு உருவானது.

தொடர்ந்து போட்டியும் ஆரம்பமாக முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 3 ஓவர்கள் ஆடி முடித்ததும் மழை குறுக்கிட்டது. ரசிகர்கள் பயந்தது போலவே மழை குறுக்கிட, ஒரு அரை மணி நேரம் கழித்து ஓவர்கள் குறைக்கப்படாமல் போட்டி மீண்டும் ஆரம்பமானது. முதல் 3 ஓவரில் காட்டிய அதே அதிரடியை மீண்டும் கையில் எடுத்த ஆர்சிபி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்தது.

பதிரானா மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் சிஎஸ்கே அணியின் பந்து வீச்சில் இல்லாமல் போனதன் விளைவு இந்த போட்டியிலும் பிரதிபலிக்க, கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி அணி 80 ரன்களை சேர்த்திருந்தது. இதனால், எதிர்பார்த்ததை விட அதிக ரன்களை சேர்த்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்களை எடுத்திருந்தது.

கோலி, பாஃப் டு பிளெஸ்ஸிஸ் தொடங்கி அனைவருமே தங்கள் பங்களிப்பிற்கு அதிக ரன்கள் சேர்க்க, நல்ல ரன்னையும் அவர்கள் எட்டி இருந்தனர். இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறாமல் போனாலும் 201 ரன்கள் சேர்த்தாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், அப்படி ஒரு சூழல் இருந்தும் இலக்கை நோக்கி ஆட தொடங்கிய சிஎஸ்கே, முதல் பந்திலேயே ருத்துராஜ் விக்கெட்டை பறிகொடுத்தது.

- Advertisement 2-

இதனைத் தொடர்ந்து ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து அணியை மீட்டெடுக்க, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் அவுட் ஆனதும் சிஎஸ்கே வெற்றி வாய்ப்பு மெல்ல மெல்ல விலக தொடங்கியது. ஆனாலும் ஜடேஜா மற்றும் தோனி இணைந்து போட்டியை திருப்ப முயற்சித்தும் 20 ஓவர்களில் 191 ரன்களை மட்டும் தான் அவர்களால் எடுக்க முடிந்தது. இதனால், ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேற்றம் கண்டு அசத்தி உள்ளது.

இதனிடையே, முதல் பந்தில் ருத்துராஜ் அவுட் ஆனதும் 15 ஆண்டுகள் கழித்து ஆர்சிபி அணிக்கு ஒரு அற்புதம் நடந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு, கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி வீரர் கெவின் பீட்டர்சன் முதல் ஓவரை வீசி முதல் பந்தில் விக்கெட் எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து, சிஎஸ்கேவுக்கு எதிராக முதல் ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே ருத்துராஜ் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

இதனால், 15 ஆண்டுகள் கழித்து ஆர்சிபி அணிக்காக ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே சுழற்பந்து வீச்சாளர் விக்கெட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்