- Advertisement -
Homeவிளையாட்டுகம்பீர் சொன்ன அந்த வார்த்தை.. என் மனசுல ஆழமா பதிஞ்சுருச்சு.. இந்திய அணியில் தேர்வான பின்...

கம்பீர் சொன்ன அந்த வார்த்தை.. என் மனசுல ஆழமா பதிஞ்சுருச்சு.. இந்திய அணியில் தேர்வான பின் மயங்க் சொன்ன விஷயம்..

- Advertisement-

இந்திய அணியில் தற்போது ரோஹித், கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, அஸ்வின் என சீனியர் வீரர்கள் நிறைய பேர் ஆடி வந்தாலும் அடுத்த சில ஆண்டுகளில் இளம் வீரர்கள் இந்திய அணியில் நிரம்பி வழிவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக உள்ளது. தற்போதும் கூட சீனியர் வீரர்களுக்கு நிகராக ஜெய்ஸ்வால், கில், ஆகாஷ் தீப் என பல வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்திய அணியின் எதிர்காலமும் அசத்தலாக இருந்து வருகிறது.

ஐபிஎல் தொடரும் இளம் வீரர்களுக்கு மிக முக்கியமான ஒரு பிளாட்ஃபார்மாக இருக்கும் சூழலில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கூட லக்னோ அணியில் இடம்பிடித்த வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருந்தார். 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவது மட்டுமில்லாமல் அதில் நிறைய வேரியேஷன்களையும் மயங்க் யாதவ் காட்டியது, பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டை பெறும் அளவுக்கு அவரை கொண்டு சேர்த்திருந்தது.

- Advertisement -

வெளிநாட்டு மண்ணிலும் வரும் போட்டிகளில் மயங்க் யாதவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மிகப்பெரிய ஒரு சொத்தாக இருப்பார் என்றும் பலர் குறிப்பிட்டு வரும் நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலும் தேர்வாகி உள்ளார். இந்த தொடரில் மயங்க் யாதவிற்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக உருவெடுப்பதுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் கூட இடம்பெறலாம் என கருதப்படுகிறது.

அப்படி ஒரு சூழலில் தனது கிரிக்கெட் பயணத்தில் கவுதம் கம்பீரின் அறிவுரை பற்றி சில கருத்துக்களை மயங்க் யாதவ் பகிர்ந்துள்ளார். லக்னோ அணியின் ஆலோசராக கம்பீர் இருந்த போது அந்த அணியில் மயங்க் யாதவ் இடம் பிடித்திருந்தார். அப்போது நடந்த சம்பவம் பற்றி பேசிய மயங்க் யாதவ், “ஒருமுறை கம்பீர் என்னிடம், ‘சில வீரர்கள் தங்கள் திறனை நிரூபிக்க நிறைய வாய்ப்புகளை பெறுவார்கள். இன்னும் சிலர் கிடைக்கும் ஒரே வாய்ப்பில் தங்கள் திறனை நிரூபித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement-

நான் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடிவந்த போதும் எனது ஷூவிற்காக ஒரு ஸ்பான்சர் கிடைக்க கடுமையாக போராடி இருந்தேன்’ என்று என்னிடம் கூறினார். அவரது வார்த்தைகள் என்னுடன் அப்படியே தங்கி விட்டது. கம்பீரும் லக்னோ அணியின் முன்னாள் பயிற்சியாளரான விஜய் தாஹியாவும் உனக்கு வாய்ப்பு கிடைக்க ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும் என என்னிடம் மிகத் தெளிவாக தெரிவித்து விட்டனர். இந்த ஆண்டில் எனக்கு வாய்ப்பு கிடைத்த போது அதனை சிறப்பாக பயன்படுத்தினேன்.

ஐபிஎல் தொடரில் நான் அறிமுகமான பின்னர் எனது ஷூக்களுக்கும் ஆஃபர்கள் நிறைய தேடி வந்தது. மோர்னே மோர்கலும் அதிகமாக பேச மாட்டார். அதே நேரத்தில் எனது பந்துவீச்சில் நிறைய விஷயங்களை கவனித்து அதில் உள்ள முக்கியமான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார். அவர் அதிகம் பேசுவது பவுலிங் யுக்திகளை குறித்து தான்” என மயங்க் யாதவ் கூறி உள்ளார்.

சற்று முன்