- Advertisement 3-
Homeவிளையாட்டுஇரண்டாவது போட்டியில் இங்கிலாந்து போடும் புதிய பிளான்.. கதிகலங்க போகும் ரோஹித் அண்ட் கோ..

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து போடும் புதிய பிளான்.. கதிகலங்க போகும் ரோஹித் அண்ட் கோ..

- Advertisement 1-

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது பற்றிய விமர்சனங்கள் இதுவரை ஓய்ந்தபாடில்லை. தினேஷ் கார்த்திக், சுனில் கவாஸ்கர், அணில் கும்ப்ளே தொடங்கி பலரும் இந்திய அணிக்கு தவறாக போன விஷயத்தை பட்டியலிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொதுவாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகள் நடக்கும் போது சுழற்பந்து வீச்சிற்கு அதிக சாதகங்கள் இருக்கும்.

அதனை முதல் இன்னிங்சில் இந்திய அணி கச்சிதமாக பயன்படுத்தி இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் அவர்கள் அதனை பின்பற்ற தவறியதன் காரணமாக இங்கிலாந்தின் ரன் குவிப்பும் நேர்த்தியாக இருந்தது. அதே வேளையில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லி, இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை எடுத்து தங்கள் அணி எளிதில் வெற்றி பெறவும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இந்திய அணிக்கு முதல் இன்னிங்சில் சுழற்பந்து வீச்சு எடுபட்டது போல, இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு கைகொடுத்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு இன்னிங்ஸில் சேர்த்து சுமார் 30 விக்கெட்களுக்கு மேல் சுழற்பந்து வீச்சாளர்கள் எடுத்திருந்ததால் இனிவரும் போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. உதாரணத்திற்கு சொல்லப் போனால், இங்கிலாந்தின் பார்ட் டைம் பவுலரான நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் கூட கூட ஐந்து விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியை ஆட்டம் காண வைத்திருந்தார்.

இதனிடையே இங்கிலாந்தின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் இந்திய அணிக்கு புதிய ஸ்கெட்ச் ஒன்றை போட தயாராகி உள்ளதாக தெரிகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரு அணிகளிலும் தலா மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடி வரும் நிலையில், சமீபத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பற்றி பேசி இருந்த மெக்கல்லம், “விசாகப்பட்டினம் மைதானத்தை பற்றி நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டு அது சுழலுக்கும் அதிக சாதகமாக இருக்கும் என்றால் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் கூட நாங்கள் களமிறங்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

இரண்டாவது போட்டியில் அவர் சொல்வது போல, சூழலுக்கு சாதகமாக இருந்து அதற்கேற்ப திட்டங்களை அருமையாக வகுத்து இங்கிலாந்து அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜடேஜா, ராகுல், விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இரண்டாவது டெஸ்டில் ஆடாமல் போனது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் நிலையில் மெக்கல்லம் போடும் இந்த திட்டமும் கூட இந்திய அணிக்கு இன்னும் சிக்கலை தரலாம் என தெரிகிறது.

சற்று முன்