- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலிய போய் தொடலாமா? இப்போ ஊரே ஒன்னு கூடிட்டாங்களே. லக்னோ அணியின் தோல்விக்கு பிறகு நவீன்...

கோலிய போய் தொடலாமா? இப்போ ஊரே ஒன்னு கூடிட்டாங்களே. லக்னோ அணியின் தோல்விக்கு பிறகு நவீன் உல் ஹக்கை கலாய்த்து தள்ளும் பிற அணி வீரர்கள். மாம்பழமே வேண்டாம் என ட்வீட் போட்ட லக்னோ

- Advertisement 1-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணி தோல்வியை சந்தித்து வெளியேறிய வேளையில் தற்போது அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக்கை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஏனெனில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதியபோது விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். அதோடு விராட் கோலிக்கும் கௌதம் கம்பீருக்கும் கூட வாக்குவாதம் நடைபெற்றது.

மேலும் போட்டிக்கு பிறகு சமூக வலைதள பக்கத்தில் கூட விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரது வார்த்தை போர் தொடர்ந்தது. அந்தவகையில் லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய வீரர்களை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பாராட்ட தொடங்கினார்.

இன்னொரு பக்கம் விராட் கோலி அவுட்டானதை நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் கொண்டாடியது போன்று இன்ஸ்டாகிராமில் தனது ஸ்டோரியை வெளியிட்டார். இப்படி சமூக வலைதள பக்கத்தில் விராட் கோலியை கிண்டல் செய்து நவீன் உல் ஹக் வெளியிடும் பதிவுகளால் ரசிகர்களும் நவீன் உல் ஹக்கை கிண்டல் செய்து அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் நவீன் உல் ஹக் நான்கு விக்கெட்டுகளை எடுத்து கே எல் ராகுல் போல காதுகளை மூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இப்படி அவரது அனைத்து செய்கைகளும் எரிச்சலூட்ட தற்போது ரசிகர்கள் பலரும் நவீன் உல் ஹக்கை சமூக வலைத்தளத்தில் விதிவிதமாக கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement 2-

இந்நிலையில் மும்பை அணியின் வீரர்களான விஷ்ணு வினோத், சந்தீப் வாரியர் ஆகியோரும் நவீன் உல் ஹக்கை வித்தியாசமான முறையில் கிண்டல் செய்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : மாம்பழங்களை மேசையின் மீது வைத்து கண், காது, வாய் ஆகியவற்றை மூடியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நவீன் உல் ஹக்கை அவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: எல்லாத்துக்கும் காரணம் நான் தான். இதுக்கு கைல் ஒத்துவருவார்னு நெனச்சோம் – லக்னோ கேப்டன் க்ருனால் பாண்டியா

இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட சில ஐபிஎல் அணிகளும் மாம்பழம் ஸ்மைலியை பதிவிட்டு லக்னோ அணியை கிண்டல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேலையில் மாம்பழம் குறித்த ட்ரோல் அதிகரிப்பதை தொடர்ந்து மாம்பழம் சம்மந்தமான வார்த்தைகளை மீயூட் செய்து ஒரு டீவீட்டை பதிவிட்டுள்ளது லக்னோ அணி.

சற்று முன்