- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி, ரோஹித் பத்தி கவலையில்ல.. அந்த பையன் ஆடியே ஆகணும்.. மைக்கேல் வாகன் பரபர கருத்து..

கோலி, ரோஹித் பத்தி கவலையில்ல.. அந்த பையன் ஆடியே ஆகணும்.. மைக்கேல் வாகன் பரபர கருத்து..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியை பொறுத்தவரைக்கும் பந்து வீச்சில் பலமாக இருந்தாலும் பேட்டிங்கில் மட்டும் தான் நிறைய பிரச்சனைகள் உருவாகி வருகிறது. நியூயார்க் மைதானங்கள் பேட்டிங்கிற்கு பெரிதாக ஒத்துழைக்கவில்லை என்றாலும் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் தடுமாறியது தான் அதிக கேள்விகளையும் எழுப்பி இருந்தது.

உலகின் எப்படிப்பட்ட கடினமாக பிட்ச்சாக இருந்தாலும் பட்டையை கிளப்பும் விராட் கோலி, நியூயார்க் மைதானத்தில் தடுமாறிய காரணம் தெரியாமல் பலரும் குழம்பி போக, அவரது ஃபார்ம் அவுட் நிச்சயம் இந்திய அணிக்கு சூப்பர் 8 சுற்றில் பெரிய தலைவலியாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 போட்டிகளில் அதிக அளவில் மூன்றாவது வீரராக களம் இறங்கி வரும் விராட் கோலி, நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஓப்பனிங் வீரராக அவர் ஆடியது பெரிய பலத்தை சேர்த்திருந்தாலும் சர்வதேச போட்டிகளில் இதுவரை எடுபட்டதே கிடையாது. ஜெய்ஸ்வால் டி20 உலக கோப்பை அணியில் தேர்வானதும் அவரும் ரோஹித் தொடக்க வீரராக களம் இறங்குவார்கள் என்றும் மூன்றாவது வீரராக விராட் கோலி வருவார் என்றும் தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படியே நேர்மாறாக ஜெய்ஸ்வாலுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படாமல் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கோலி தொடர்ந்து தொடக்க வீரராக சொதப்பி வருவதால் சூப்பர் 8 போட்டிகளில் அவர் மூன்றாவது வீரராக களம் இறங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது.

- Advertisement 2-

இந்த நிலையில் இது பற்றி இங்கிலாந்தின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “எனக்கு ஜெய்ஸ்வாலை மிகவும் பிடிக்கும். அவர் இந்திய அணியின் தொடக்க வீரராக ஆட வேண்டும் என நான் விரும்புகிறேன். கோலி அல்லது ரோஹித் என யாராக இருந்தாலும் மூன்றாவது வீரராக வரட்டும். எனக்கு அதைப் பற்றி கவலை கிடையாது. ஆனால் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக ஆட வேண்டும்.

ஐந்தாவது வீரராக ஷிவம் துபே ஆடிவரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த இடத்தில் ரிஷப் பந்த் ஆடினால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன். கடந்த பல ஐசிசி தொடர்களில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் ஆடாமல் போனது தான் இந்திய அணி செய்த பெரிய தவறாக நான் பார்க்கிறேன். இதனால் அதனை எல்லாம் புரிந்து கொண்டு ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக ஆட வேண்டும் என்பது எனது விருப்பம்” என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

சற்று முன்