Homeகிரிக்கெட்கோலி பத்தி நீ சொல்றத ஒத்துக்க முடியாது.. மனுஷன் சரியா ஆடுனாரு.. பாக் வீரருக்கு பதிலடி...

கோலி பத்தி நீ சொல்றத ஒத்துக்க முடியாது.. மனுஷன் சரியா ஆடுனாரு.. பாக் வீரருக்கு பதிலடி கொடுத்த மைக்கல் வாகன்

-Advertisement-

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த நவம்பர் 5-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை தோற்கடித்து தொடர்ச்சியாக தங்களது எட்டாவது வெற்றியை இந்த உலக கோப்பை தொடரில் பதிவு செய்தது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இறுதிவரை களத்தில் நின்று 101 ஒரு ரன்களை குவித்தார்.

அவரது அந்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்கிற சாதனையையும் விராட் கோலி சமன் செய்திருந்தார். சதம் விளாசிய அவருக்கே போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விராட் கோலி இப்படி சச்சின் சாதனையை சமன் செய்தது பலரால் பாராட்டப்பட்டாலும் சிலர் அவர் பொறுமையாக சதம் அடிக்க வேண்டும் என்பதற்காகவே சுயநலமாக விளையாடினார் என்று குற்றம் சாட்டினார்.

-Advertisement-

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமது ஹபீஸ் கூறுகையில் : விராட் கோலி சுயநலத்தோடு தான் பேட்டிங் செய்தார். 49-ஆவது ஓவரின் போதும் அவர் சதத்திற்காக சிங்கிள்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அது அவரின் தனிப்பட்ட சாதனைக்காக அவர்களின் அணியை தாழ்த்தும் வகையில் இருந்தது. ரோகித் சர்மாவாலும் சுயநலமான கிரிக்கெட் விளையாட முடியும். ஆனால் அவர் அப்படிப்பட்ட வீரர் கிடையாது. அவர் அணிக்காக அதிரடியாக விளையாடுகிறார்.

ஆனால் விராட் கோலி சதத்துக்காக சுயநலமாக விளையாடுவதாக கடுமையான விமர்சனம் ஒன்றினை முன் வைத்திருந்தார். அவரது இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : “கம் ஆன் ஹபீஸ்”.. இந்தியா இந்த தொடரில் 8 அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி மிகச் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது.

-Advertisement-

விராட் கோலி 49 சதங்கள் அடித்துள்ளார். கடந்த போட்டியில் அவருக்கு ஆங்கர் ரோல் வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே சவாலான அந்த மைதானத்தில் கடைசிவரை நின்று விளையாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலேயே அவர் பொறுமையாக விளையாடினார். இருப்பினும் இந்திய அணி அந்த போட்டியில் 200 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நீங்கள் கூறும் இந்த கருத்து எல்லாம் ஏற்புடையதாக இல்லை என்று நேரடியாகவே தனது பதிலை அளித்துள்ளார்.

மைக்கல் வாகன் குறிப்பிட்டது போலவே இந்திய அணி அந்த போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு தனி நபராக விராட் கோலி அடித்த 101 ரன்களை கூட தென்னாப்பிரிக்க அணி அடிக்கவில்லை என்று ரசிகர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 101 ரன்களை அடித்ததன் மூலம் சச்சின் மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்து ஒரு உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்