- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி அடிச்ச 76 ரன்கள் இல்ல.. ரோஹித்தோட இந்த பேட்டிங் தான் டி20 வேர்ல்டு கப்போட...

கோலி அடிச்ச 76 ரன்கள் இல்ல.. ரோஹித்தோட இந்த பேட்டிங் தான் டி20 வேர்ல்டு கப்போட சிறந்த இன்னிங்ஸ்.. ஆர்சிபி பிரபலம் பேச்சு..

- Advertisement-

பொதுவாக எப்போதும் ஒரு டி20 உலக கோப்பை தொடர் அல்லது ஐசிசி தொடர்களா நடந்து முடிந்தால் அதில் சிறந்த இன்னிங்ஸ் எது என்பதும், சிறந்த பந்து வீச்சு எது என்பது பற்றியும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஆர்சிபி அணியின் முன்னாள் இயக்குனர் மைக் ஹெசன் கடந்த டி20 உலக கோப்பை தொடரில் தான் விரும்பிய சிறந்த டி20 இன்னிங்ஸ் பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு கடைசியாக ஐசிசி கோப்பையை வென்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, 11 ஆண்டுகள் கழித்து நடந்த டி20 உலக கோப்பையை சமீபத்தில் வென்றிருந்தது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் நிலை தான் உருவாகியிருந்தது.

- Advertisements -

ஆனால் கடைசி கட்டத்தில் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்ததுடன் இந்தியாவின் வெற்றியையும் உறுதி செய்திருந்தனர். நீண்ட நாட்களாக ஒரு உலக கோப்பைக்காக காத்துக் கிடந்த இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தையும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கொடுத்திருந்தது.

பந்து வீச்சு, பேட்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியில் விராட் கோலியின் பேட்டிங் மட்டும் தொடர்ந்து ஏமாற்றமாக இருந்து வந்தது. இறுதிப் போட்டி வரையிலும் எந்த பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்த கோலி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஃபைனலில் மற்ற வீரர்கள் சொதப்பிய போது தனியாளாக நின்று 76 ரன்கள் சேர்த்திருந்தார்.

- Advertisement-

இந்திய அணி கோப்பையை வெல்லவும் இந்த இன்னிங்ஸ் முக்கிய காரணமாக அமைந்ததுடன் பலரும் இதுதான் இந்த உலகக் கோப்பையின் சிறந்த பேட்டிங் என்று குறிப்பிட்டனர். ஆனால் கோலி இறுதி போட்டியில் அடித்த 76 ரன்களை விட தனக்கு பிடித்த சிறந்த இன்னிங்ஸ் ரோஹித் உடையது என மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 205 ரன்கள் எடுத்திருந்தது. இதில் கேப்டன் ரோஹித் ஷர்மா 41 பந்துகளில் ஏழு ஃபோர்கள் மற்றும் எட்டு சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை அரையிறுதி நுழைய விடாமல் வெளியே அனுப்பி இருந்தது. இதனிடையே மைக் ஹெசனின் முன்பு இறுதி போட்டியில் கோலி அடித்த 76 ரன்கள் உள்ளிட்ட சிறப்பான இன்னிங்ஸ் எது என தேர்வு செய்ய சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டது.

அப்போது பேசிய மைக் ஹெசன், “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா அடித்த 92 ரன்கள் தான் இந்த உலகக் கோப்பை தொடரின் சிறந்த இன்னிங்ஸ்” என குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்