- Advertisement -
Homeவிளையாட்டுநாங்க பயப்படுவோம்.. ரோஹித் கேப்டனா இல்லாம போனது சந்தோசம்.. உண்மையை ஒப்புக் கொண்ட சிஎஸ்கே பிரபலம்..

நாங்க பயப்படுவோம்.. ரோஹித் கேப்டனா இல்லாம போனது சந்தோசம்.. உண்மையை ஒப்புக் கொண்ட சிஎஸ்கே பிரபலம்..

- Advertisement-

17 வது ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் பல போட்டிகளில் பேட்ஸ்மேன்களால் ரன் அடிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம், பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கும் நிலையில் அது எந்த நேரத்தில் அப்படி ஸ்லோவாகிறது என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

திடீரென பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் மைதானங்கள் எதிர்பாராத நேரத்தில் பந்து வீச்சாளருக்கு சாதகமாக மாறி விக்கெட் விழவும், ரன்னை கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது. சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டி இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. முதல் 10 ஓவர்களில் ஏறக்குறைய 90 ரன்கள் வரை அடித்திருந்த சிஎஸ்கே அணி நிச்சயம் 190 ரன்கள் வரை அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி பத்து ஓவர்களில் சிஎஸ்கே அணியினரால் ரன் அடிக்கவே முடியாமல் போக ஏழு ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஹைதராபாத் அணியும் கூட பவர் ப்ளே முடிவில் 80 ரன்கள் வரை அடித்திருந்த நிலையில் மீதி இலக்கை எட்டுவதற்கு 19 வது ஓவர் வரை எடுத்துக் கொண்டனர். இன்னும் ஒரு பத்து முதல் 15 ரன்களை சிஎஸ்கே அடித்தால் அவர்கள் வெற்றி பெறுவதற்கு கூட வாய்ப்பு உருவாகி இருக்கும்.

- Advertisement-

இப்படி பிட்ச் பற்றிய ட்விஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருந்து வரும் நிலையில் இனி வரும் போட்டிகளில் இதனை பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர். இதற்கிடையே சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டிக்கு நடுவில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, ரோஹித் பற்றி சொன்ன விஷயம் தற்போது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை கடுமையாக ஏங்க வைத்துள்ளது.

இதில் நெறியாளர் மைக் ஹசியிடம் சிஎஸ்கே நிர்வாகம் பயந்து பார்த்த கேப்டன் யார் என்று கேள்வியை கேட்க, ஹசி சொன்ன பதில் தான் பலரையும் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியுள்ளது. “உண்மையை சொல்லப்போனால் இந்த வருடத்தில் யாருமே அப்படி கிடையாது. ஒரே ஒரு கேப்டன் எங்களை இறுதிப் போட்டியில் தோற்கடித்தவர் இருந்தார். ஆனால் அவர் இப்போது கேப்டனாக இல்லை. உங்களுக்கே தெரியும் நான் யாரைப் பற்றி பேசுகிறேன்” என சிரித்துக் கொண்டே பதில் தெரிவித்தார்.

சிஎஸ்கே அணி மும்பை அணிக்கு எதிராக மட்டும் இறுதிப் போட்டியில் இதுவரை ஐபிஎல் தொடரில் வென்றதே கிடையாது. அப்போது எல்லாம் அவர்களை வழிநடத்தி வந்த கேப்டன் தான் ரோஹித் சர்மா. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை கேப்டன் பதவியில் அவர் விலக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்