- Advertisement -
Homeவிளையாட்டுதோனியின் முழங்கால் பிரச்சனை தற்போது எப்படி உள்ளது? சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி கூறிய...

தோனியின் முழங்கால் பிரச்சனை தற்போது எப்படி உள்ளது? சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி கூறிய தகவல்

- Advertisement-

கடந்த சில போட்டிகளாகவே தோனி, இடது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால்தான் அவர் அனைத்து போட்டிகளிலும் கடைசியாக பேட்டிங் செய்ய வந்து மிக சொற்பமான பந்துகளையே எதிர்கொள்கிறார் என்பது பலரும் அறிந்த உண்மை.  மேலும் இது சம்மந்தமாக பேசிய தோனி “என்னால் என்ன முடியுமோ அதை செய்கிறேன். என்னை அதிகமாக ஓட வைக்காதீர்கள் என்பதையே நான் அணி வீரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்” எனக் கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கூட அவர் முழங்காலில் மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்திக் கொண்டவாறுதான் மைதானத்தை சுற்றி நடந்து வந்தார்.

இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தோனியின் முழங்கால் பிரச்சனை பற்றி பேசியுள்ளார். அதில் “தோனி கடைசி சில ஓவர்கள் மட்டுமே வந்து விளையாட விரும்புகிறார் என்பது உண்மைதான்.  அவரின் மூட்டு பிரச்சனை இன்னும் 100 சதவீதம் சரியாகவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டிக்கும் அவர் முன்னேற்றம் கன்டு தன்னுடைய முழு பங்களிப்பை அவர் கொடுத்து வருகிறார். அதுதான் அவரின் திட்டம். அதனால் அவரால் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே வந்து விளையாட முடியாது” எனக் கூறியுள்ளார்.

மேலும் இதுபற்றி பேசியுள்ள ஹஸ்ஸி “தோனி தாமதமாக இறங்குவதால் சில பின்னடைவுகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அவர் துபே, ஜடேஜா மற்றும் ராயுடு ஆகியோரின் மீது நம்பிக்கை வைத்துள்ளார். தோனி கிரிக்கெட்டில் ஒரு லெஜண்ட்.

- Advertisement-

முழங்கால் பிரச்ச்னை இருந்தாலும் அவர் சிறப்பாக பேட் செய்கிறார். பவுனடரிகள் அடிக்கிறார். வலைப் பயிற்சியில் ஈடுபடுகிறார். எங்கள் அணிக்காக நாங்கள் பெறும் ஆதரவு நம்ப முடியாத அளவுக்கு உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: அஸ்வின் விளையாடாதது ஏன்? எங்கள் நிலையை கண்டால் எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது – சஞ்சு பேச்சு

தோனி சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாக இருந்து அணியை இயக்கி வருகிறார். அவர் பேட்டிங் செய்யவில்லை என்றாலும் 20 ஓவர்களும் விக்கெட் கீப்பராக ஓடியாடி விளையாடுகிறார். முழங்கால் பிரச்சனையால் அவர் எந்த தவறையும் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்