Homeவிளையாட்டுமின்சாரத்தால் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க இந்த கருவியை கட்டாயம் வீட்டில் பொருத்தனும்

மின்சாரத்தால் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க இந்த கருவியை கட்டாயம் வீட்டில் பொருத்தனும்

நம் வீடுகளில் RCD பொருத்துவது, நமது அன்புக்குரியவர்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது! இந்த சிறிய அக்கறை மின்சார வீடுகளில் மின் விபத்துகளைத் தடுக்கும். வீடு நமது அன்பின் கூடு, அதனை RCD-யுடன் பாதுகாப்போம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆர்சிடி என்றால் என்ன? ஏன் பொருத்த வேண்டும்?:

எஞ்சிய மின்னோட்டம் சாதனம் (ஆர்சிடி) என்பது ஒரு பாதுகாப்பு சாதனம் ஆகும். இது மின்சார ஓட்டத்தில் ஏதேனும் தவறு இருந்தால் தானாகவே மின்சாரத்தை அணைக்கும் திறன் கொண்டது ஆகும். RCDகள் சாதாரண உருகிகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்களை விட அதிக உணர்திறன் கொண்டவை. அதாவது வீட்டில்தான் பியூஸ் இருக்கிறேதே என்று சொல்ல வேண்டாம். இது பியூஸை விட வேகமானது. அதோடு திறன் கொண்டது. மின்சார அதிர்ச்சிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. இதனால் உங்களுக்கு ஷாக் அடிப்பதை தவிர்க்கலாம்.

ஒரு RCD மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு மின்சார ஓட்டம் தவறான நேரங்களில் தடுக்கப்பட்டு உயிர்காக்க முடியும். RCD கருவி பொதுவாக மின்சார சர்க்யூட் எனப்படும் சுற்றுடன் பாயும் மின்சாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.

சற்று முன்