- Advertisement -
Homeவிளையாட்டு7 பாலில் 30 ரன்... 49 வயதில் அசத்தலான அதிரடி ஆட்டம்... ஹர்பஜன் அணியை பந்தாடிய...

7 பாலில் 30 ரன்… 49 வயதில் அசத்தலான அதிரடி ஆட்டம்… ஹர்பஜன் அணியை பந்தாடிய சீனியர் வீரர்

- Advertisement-

யூஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் ஆட்டங்கள் ஆகஸ்ட் 18 தொடங்கி ஆகஸ்ட் 27 வரை நடைபெற்று வருகிறது. இதில் அட்லாண்டா ரைடர்ஸ், கலிபோர்னியா நைட்ஸ், மோரிஸ்வில்லி யூனிட்டி ,நியூஜெர்சி டைட்டன்ஸ், நியூயார்க் வாரியர்ஸ் மற்றும் டேக்சாஸ் சார்ஜர்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற உள்ளது.

ராபின் உத்தப்பா அட்லாண்டா ரைடர்ஸ் அணிக்கும் ,சுரேஷ் ரெய்னா கலிபோர்னியா நைட்ஸ் அணிக்கும் ,ஹர்பஜன் சிங் மோரிஸ்வில்லி யூனிட்டி அணிக்கும் ,கௌதம் கம்பீர் நியூ ஜெர்சி டைட்டன்ஸ் அணிக்கும் ,மிஸ்பா உல் ஹக் நியூயார்க் வாரியர்ஸ் அணிக்கும் கேப்டனாக செயல்படுகின்றனர். போட்டிகள்அனைத்தும் அமெரிக்க நேரத்தின் படி நடைபெற்று வருகிறது.

இந்த லீக் தொடரின் 21 வது ஆட்டம் மோரிஸ்வில்லி யூனிட்டி அணிக்கும் நியூயார்க் வாரியர்ஸ் அணிக்குமிடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூயார்க் வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கம்ரான் அக்மல் 23 ரன்களும், திலகரத்ன டில்ஷன் 37 ரன்களையும், மிஸ்பா உல் ஹக் 38 ரன்களையும், அப்ரிடி 22 ரன்களையும் சேர்த்தனர். பின்பு மோரிஸ் வில்லி யூனிட்டி அணி 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கியது.

அதன் தொடக்க ஆட்டக்காரர்களான செஹன் ஜெயசூர்யா 44 ரன்னும், பார்த்திவ் படேல் 14 ரன்களையும் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய அப்ரிடி 22 ரன்கள், ஓபஸ் பியன்னர் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்பு வந்த வீரர்களாள் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியவில்லை. அந்த அணி 10 ஓவர்களின் முடிவில் 106 ரன்களை மட்டுமே குவித்து தோல்வியை தலுவியது.

- Advertisement-

மோரிஸ்வில்லி யூனிட்டி அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இவர் 14 பந்துகளில் 38 ரன்களை 271 .35என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் அடித்த 38 ரன்களில் ஒரு பவுண்டரியும் 5 சிக்சர்களும் அடங்கும். இவர் 40 வயதிலும் 20 வயது இளைஞனை போல அதிரடி காட்டியது கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னாள் பாகிஸ்தான் அணி வீரரான மிஸ்பா உல் ஹக் 85 டெஸ்ட் போட்டிகளில் 5,222 ரன்களையும், 162 ஓருநாள் போட்டிகளில் 5122 ரன்களும், 39 டி20 போட்டிகளில் 788 ரன்களையும் அடித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு மூன்று வகையான கிரிக்கெட் ஃபார்மட்டுக்களிலும் கேப்டனாக வழிநடத்தியுள்ளது மட்டுமல்லாமல், தலைமை பயிற்சியாளராகவும் தேர்வு குழு தலைவராகவும் இருந்துள்ளார்.

சற்று முன்