- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியா அன்னைக்கி தோத்துருக்கணும்.. ஒரே ஒரு தப்பால கோட்டை விட்டோம்.. இன்னும் மறக்காத மிஸ்பா உல்...

இந்தியா அன்னைக்கி தோத்துருக்கணும்.. ஒரே ஒரு தப்பால கோட்டை விட்டோம்.. இன்னும் மறக்காத மிஸ்பா உல் ஹக்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. ராகுல் டிராவிட் தலைமையில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி என பலர் இருந்த போதிலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும், பின்னர் இலங்கை அணிக்கு எதிராகவும் அவர்கள் லீக் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கொந்தளிக்க வைத்திருந்தது.

இது தொடர்பாக பல்வேறு சர்ச்சை சம்பவங்களும் அரங்கேறி இருந்த சமயத்தில் தான் டி20 உலக கோப்பைத் தொடரில் அதே ஆண்டில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது. சீனியர் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பைத் தொடரில் இடம்பெறாமல் போக, தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய படை, முதல் கோப்பையை சொந்தமாக்கி இருந்தது.

- Advertisements -

லீக் சுற்றில் இருந்த ஆபத்தான கட்டத்தை தாண்டிய இந்திய அணி, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதில் பாகிஸ்தான் அணி நடுவே தடுமாற்றத்தை காண, இலக்கை நோக்கி ஆடிய அந்த அணியில் மிஸ்பா உல் ஹக் பவுண்டரிகளை பறக்க விட்டு நெருக்கடி கொடுத்திருந்தார்.

கடைசி ஓவரில் கைவசம் ஒரு விக்கெட் இருக்க, 6 ரன்கள் தேவைப்பட்ட போது மிஸ்பா அடித்த பந்து கேட்சாக மாறியதால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் டி20 உலக கோப்பையை சொந்தமாக்கி இருந்தது. கிரிக்கெட் அரங்கில் மிக முக்கியமான் ஒரு நாளாகவும் அது மாற, இறுதி போட்டியில் பாகிஸ்தான் கேப்டனாக இருந்த மிஸ்பா உல் ஹக் இது பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“நாங்கள் வெற்றி பெறுவோம் என அதிக தன்னம்பிக்கையுடன் இருந்தோம். ஏனென்றால் அங்கே பவுண்டரிகள் அருகே இருந்தது. இதனால், சுழற்பந்து வீச்சை அதிகம் சார்ந்திருக்கும் இந்திய அணிக்கு அங்கே வெற்றி பெறுவது மிக கடினமான விஷயமாகும். அப்போது இந்திய அணியின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங். ஷார்ட் பவுண்டரிகள் இருக்கும் இடத்தில் ஆப் ஸ்பின்னர் ஒருவருக்கு பந்து வீசுவது கடினம்.

அதே போல, நாங்களும் சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடக்கூடியவர்கள். இதனால், இலக்கு எளிதானது என்றே நினைத்தோம். நல்ல தொடக்கம் அமைந்தால் போதும் என நினைக்க, 3 ஓவர்களில் சில முக்கிய விக்கெட்டுகளை இழந்தோம். இம்ரான் நசீர் ரன் அவுட்டும் நெருக்கடி கொடுக்க, 77 ரன்களில் 6 விக்கெட்டுகள் போனதே எங்களுக்கு இலக்கை கடினமாக மாற்றி விட்டது. அதிக தன்னம்பிக்கையால் அனைத்தும் தவறாக போனதாகவே உணர்ந்தேன்” என மிஸ்பா உல் ஹக் கூறினார்.

கடைசி ஓவரில் கைவசம் ஒரு விக்கெட் இருந்ததால், இந்திய அணி வெற்றி பெறுவதில் முன்னிலையில் இருந்ததுடன் அதனை சாதித்தும் காட்டிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சற்று முன்