- Advertisement -
Homeவிளையாட்டுIND vs AUS : ஒரே கேட்ச் மொத்த மேட்சும் க்ளோஸ். மிகப்பெரிய தவறை செய்து...

IND vs AUS : ஒரே கேட்ச் மொத்த மேட்சும் க்ளோஸ். மிகப்பெரிய தவறை செய்து அணியின் வெற்றியை சீர்குலைத்த ஆஸி வீரர்

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 50 உலகக் கோப்பை தொடரின் ஐந்தாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது வெற்றி பயணத்தை துவங்கியுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து அதிர்ச்சியை அளித்தது. அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, இசான் கிஷன் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர்.

பின்னர் 4-ஆவது வீரராக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட் ஆகினார். இப்படி டாப் 3 வீரர்களும் வெளியேறிய நிலையில் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இன்னிங்சை நிலைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அணியின் ஸ்கோர் 20 ரன்களில் இருந்தபோது விராட் கோலி கொடுத்த எளிதான கேட்ச்சை ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் மார்ஷ் தவற விட்டார்.

- Advertisement-

அவர் தவறவிட்ட அந்த வாய்ப்பை பயன்படுத்திய விராத் கோலி ராகுலுடன் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மார்ஷ் விட்ட அந்த கேட்ச்சே போட்டியின் திருப்பு முனையாகவும் அமைந்தது. ஏனெனில் 20 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்திருந்தால் ஒருவேளை இந்திய அணியின் தோல்வியும் அங்கே உறுதியாகி இருக்கலாம். ஆனால் விராட் கோலியின் அந்த முக்கிய கேட்ச்சை மிட்சல் மார்ஷ் தவறவிட்டதால் அவர்கள் போட்டியையும் தவறவிட வேண்டிய நிலை ஆயிற்று.

தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய விராட் கோலி 116 பந்துகளில் ஆறு பவுண்டரியுடன் 85 ரன்கள் குவித்து நல்ல பார்ட்னர் ஷிப் அமைத்தார். அதோடு கே.எல் ராகுல் 97 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இப்படி மிட்சல் மார்ஷ் தவறவிட்ட கேட்ச் ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்