- Advertisement -
Homeவிளையாட்டுஅபிஷேக் ஷர்மா விக்கெட்டை எடுப்பதற்கு முன்.. ஹெட்டை மிரட்டிய ஸ்டார்க்.. இத பாக்காம விட்டுட்டோமே..

அபிஷேக் ஷர்மா விக்கெட்டை எடுப்பதற்கு முன்.. ஹெட்டை மிரட்டிய ஸ்டார்க்.. இத பாக்காம விட்டுட்டோமே..

- Advertisement-

ஐபிஎல் தொடர் இறுதி போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆனாலும் அதில் கொல்கத்தா அணி வீரர்கள் தனித்தனியாக செயல்பட்ட விஷயத்தை நிச்சயமாக மறக்கவே முடியாது. இந்த ஐபிஎல் தொடர் முழுக்க ஒரு அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுமே நல்ல பங்களிப்பை அளித்தார்கள் என்றால் நிச்சயம் கொல்கத்தா அணியை முதலாவதாக கைகாட்டி விடலாம்.

மற்ற அணிகளில் எல்லாம் பெரும்பாலும் இரண்டு முதல் மூன்று வீரர்களை நம்பித்தான் அவர்கள் போட்டிகளில் ஆடிவந்த நிலையில் கொல்கத்தாவில் மட்டும் ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு வீரர்கள் சிறந்த பங்களிப்பை தொடர்ந்து அளித்தே வந்தனர். இது தவிர பல போட்டிகளில் அணியில் ஆடிய அனைத்து வீரர்களுக்குமே நல்ல பங்களிப்பை அளிக்க கொல்கத்தா அணியின் பிளே ஆப் மிக எளிதாக இருந்தது.

பந்துவீச்சை பொறுத்த வரையில் ரசல், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ராணா, அரோரா, ஸ்டார்க் என ஒவ்வொருவரும் முக்கியமான விக்கெட்டுகளை தேவைப்படும் நேரத்தில் வீழ்த்தி வந்தனர். இதே போல இந்த சீசனில் சேசிங்கில் ஒருமுறை கூட தோல்வி பெறாத கொல்கத்தாவில் ஷ்ரேயஸ் ஐயர், பிலிப் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ரசல் என அனைவருமே நல்ல பேட்டிங்கை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதில் பந்து வீச்சாளர் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்ததும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லீக் போட்டியில் அவரது பந்து வீச்சு மோசமாக அமைய, ரன்களையும் நிறைய வாரி வழங்கியிருந்தார்.

- Advertisement-

விக்கெட்டுளும் ஒன்றிரண்டாக சேர்த்து வந்த நிலையில், பிளே ஆப் சுற்றில் தான் ஸ்டார்க்கின் ஆட்டமே வேற மாதிரி இருந்தது. ஹைதராபாத் அணிக்கு எதிரான இரண்டு போட்டியிலும் சேர்த்து 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார் ஸ்டார்க். அதிலும் குவாலிஃபயர் 1 போட்டியில் ஹெட்டை முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து ஹைதராபாத் அணிக்கு பயம் காட்டி இருந்தார்.

ஹெட் இதுவரை நான்கு முறை ஸ்டார்க் பந்துவீச்சை எதிர்கொண்ட நிலையில், மொத்தமாக ஒரு ரன் மட்டும் தான் அவருக்கு எதிராக அடித்து நான்கு முறையும் அவுட்டாகி உள்ளார். இதே போல இறுதி போட்டியிலும் முதல் ஓவரில் அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை ஸ்டார்க் எடுக்க, ஹைதராபாத் அணியின் பேட்டிங் தடுமாற்றம் கண்டது. மேலும் இந்த இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதையும் அவர் தான் வென்றிருந்தார்.

இந்நிலையில் இறுதி போட்டியில் அபிஷேக் ஷர்மாவுக்கும் முதல் பந்தை வீசிவிட்டு ஹெட்டை பார்த்து ஸ்டார்க் காட்டிய சைகை தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. ஸ்டார்க் வீசிய முதல் பந்து, மிக அபாரமாக ஸ்விங் ஆகி செல்ல, இதனை வீசிவிட்டு அவர் நடந்து வந்த சமயத்தில் எதிர்புறம் நின்ற ஹெட்டிடம், ‘இந்த பந்தை சந்திக்கிறாயா’ என்பது போல் சைகை ஒன்றையும் சிரித்துக் கொண்டே காட்டி இருந்தார்.

அவரது சிரிப்பு ஒரு வில்லன் போல இருந்த நிலையில், ஒரு வேளை ஹெட் எதிர்கொண்டிருந்தால் அவுட் கூட ஆகியிருக்கலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்