இந்திய அணிக்காக மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரிலும் பல சர்வதேச வீரர்களை மிக சிறப்பாக ஒருங்கிணைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல கோப்பைகளை கைப்பற்றுவதற்கு முக்கிய பங்கு வகித்திருந்தவர் தான் எம். எஸ். தோனி.
சர்வதேச அரங்கில் மூன்று ஐசிசி கோப்பைகளை 6 ஆண்டு இடைவெளிக்குள் வென்று கொடுத்த தோனி, அதே வேகத்தை ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வெளிப்படுத்தி இருந்தார். 10 முறைக்கு மேல் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதில் ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதற்கான பெருமையை நிச்சயம் தோனி பெயரில் மட்டுமே எழுதி விடலாம். இதற்கு காரணம் சிஎஸ்கே அணியில் அனுபவம் இல்லாத வீரர்களாக இருந்தால் கூட அவர்களை வைத்தே போட்டியை வெல்லும் திறன் தோனி கையில் இருந்தது தான். அத்துடன் சர்வதேச அரங்கில் ஜொலித்த பல கிரிக்கெட் ஜாம்பவான்களும் கூட தோனி தலைமையில் ஆடி உள்ளனர்.
ஸ்டீபன் பிளெம்மிங், மேத்யூ ஹைடன், மைக் ஹசி, ப்ரெண்டன் மெக்கல்லம் தொடங்கி பல பிரபல வெளிநாட்டு வீரர்களும் தோனியின் தலைமையில் ஐபிஎல் தொடர் மூலம் ஆடி உள்ள சூழலில் அதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயீன் அலியும் ஒருவர்.
இங்கிலாந்தின் சிறந்த சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான மொயீன் அலி, சர்வதேச அரங்கில் தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்திருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சில காலங்கள் ஐபிஎல் தொடரில் ஆடி இருந்தார்.
அதற்கு முன்பாக ஆர்சிபி அணியில் மொயீன் அலி இடம்பிடித்திருந்த போதும் அவரது ஆட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் தோனியின் தலைமையில் சென்னை அணிக்காக ஆடிய போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கிய மொயீன் அலி, சமீபத்தில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்திருந்தார்.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் தான் ஆடியதிலேயே சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி மொயீன் அலியிடம் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. இதற்கு பதில் தெரிவித்த மொயீன் அலி, “நிச்சயமாக இயான் மார்கன் மற்றும் தோனி ஆகியோர் தான். இங்கிலாந்து அணியை பொருத்த வரையில் நிச்சயம் மோர்கன் ஒரு அபாரமான கேப்டன்.
அது மட்டுமில்லாமல் ஒரு சிறந்த தலைவருக்கு இருக்கும் அனைத்து குணங்களும் இயான் மோர்கனிடம் இருந்தது. அதை வைத்து நிறைய சாதனைகளையும் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அரங்கேற்றியுள்ளார்” என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.