- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதுதான் லாஸ்ட்.. இனி டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே வர மாட்டேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அறிவிப்பு

இதுதான் லாஸ்ட்.. இனி டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே வர மாட்டேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அறிவிப்பு

- Advertisement 1-

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்ததால், இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். கையில் இருந்த கேட்சை ஆஸ்திரேலிய அணி கோட்டைவிட்டது.

இந்த ஆஷஸ் தொடருக்கு முன் இங்கிலாந்து அணியின் ஜாக் லீச் காயமடைந்தார். சிறிய காயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஷஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ஸ்பின்னர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி திணறிய போது, ஓய்வில் இருந்த மொயின் அலி மீண்டும் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதன்பின் ஆஷஸ் தொடரில் விளையாடிய மொயின் அலி, 4 போட்டிகளில் விளையாடி 180 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக மொயின் அலி இருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயின் அலி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மொயின் அலி பேசும் போது, ஓய்வில் இருந்து மீண்டும் வந்து இங்கிலாந்து அனிக்காக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. ஜாக் லீச் காயமடைந்தது தெரியவில்லை. அப்போது பென் ஸ்டோக்ஸ் மெசேஜ் அனுப்பினார். இந்த ஆஷஸ் தொடரை மகிழ்ச்சியுடன் விளையாடினேன். நிச்சயம் மனதளவில் கடினமாக இருக்கும் என்பது முன்பே தெரியும். ஆனால் உடல் அளவிலும் கடினமாக இருந்தது.

- Advertisement 2-

காயத்துடன் பேட்டிங் செய்ய களமிறங்கியது எனது கடைசி ஆட்டம் என்பதால் தான். அதனால் அணிக்காக செய்ய விரும்பினேன். இதற்கு முன்பாகவும் 3வது இடத்தில் களமிறங்கி இருக்கிறேன். மீண்டும் பென் ஸ்டோக்ஸ் மெசெஜ் அனுப்பினால், மீண்டும் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பை ஏற்க மாட்டேன். இதுதன் கடைசி என்று தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த மொயின் அலி, டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஏராளமான போட்டிகளில் களமிறங்கினார். இதனால் இனி லீக் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்