- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலியோட ஆட்டத்தை பார்த்து இவங்களுக்கு இப்போ நிச்சயம் பயம் இருக்கும். அவர் இப்போ இருக்கற பார்முக்கு...

கோலியோட ஆட்டத்தை பார்த்து இவங்களுக்கு இப்போ நிச்சயம் பயம் இருக்கும். அவர் இப்போ இருக்கற பார்முக்கு தெறிக்கவிட போறாரு – முகமது கைஃப் கருத்து

- Advertisement 1-

மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டி மே 30 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடந்து வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசனில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது. இதையடுத்து இந்திய அணி இப்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகி வருகிறது.

இப்போது கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 சீசன்களாக கோலி சர்வதேசக் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளிலும் தனது ஃபார்மை இழந்து போராடி வந்தார்.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் சீசனில் இடையில் சில போட்டிகளில் சறுக்கினாலும் கோலி கடைசி இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து கலக்கினார். இதன் மூலம் இந்த சீசனில் அவர் 639 ரன்களைக் குவித்தார். இதில் 6 அரைசதங்களும் 2 சதங்களும் அடங்கும்.

சில காலம் பார்மில் இல்லாமல் ஒருந்த கோலி, கடந்த ஆண்டு இறுதியில் தன்னுடைய பார்மை மீட்டெடுத்தார். அதன் விளைவாக அடுத்தடுத்து டி 20, ஒருநாள் மற்று டெஸ்ட் போட்டிகளில் சதங்களை அடித்து மீண்டும் தன்னை ஒரு ரன் மெஷின் என நிரூபித்தார். அதேபோல ஐபிஎல்-லிலும் கலக்கினார்.

- Advertisement 2-

தற்போது அவர் இருக்கும் பார்ம் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும். அடுத்தடுத்து இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் என முக்கியமான தொடர்கள் உள்ளன. அதில் கோலியின் பங்களிப்பு இந்திய அணிக்கு இன்றியமையாதது.

இதையும் படிக்கலாமே: ஐபிஎல் மூலமா சுப்மன் கில் சம்பாதிச்சது எத்தனை கோடியா தெரியுமா? இந்த சீசனில் விருதுகள் மூலமாகவே அவர் இத்தனை லட்சங்களை பார்த்துள்ளார்

இந்த நிலையில் கோலி பார்முக்கு திரும்பியது பற்றி பேசியுள்ள முகமது கைஃப், “கோலியின் இந்த ஆட்டம் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆஸீ வீரர்களின் மனதில் பயத்தை உண்டாக்கி இருக்கும்.  அடுத்து அவர்களைதான் கோலி, இங்கிலாந்தில் எதிர்கொள்கிறார். அவர்களுக்கு எதிராக கோலியிடம் இருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்