- Advertisement 3-
Homeவிளையாட்டுஇஷான் கிஷனுக்கோ அக்சர் பட்டேலுக்கோ அந்த தகுதி கிடையாது. இதற்கு சரிப்பட்டு வரக்கூடிய ஒரே ஆள்...

இஷான் கிஷனுக்கோ அக்சர் பட்டேலுக்கோ அந்த தகுதி கிடையாது. இதற்கு சரிப்பட்டு வரக்கூடிய ஒரே ஆள் சஞ்சு சாம்சன் தான் – முகமது கைஃப் ஒபன் டாக்

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் விளாசிய அரைசதம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர் முகமது கைஃபையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் ஒரு விக்கெட் வீழ்த்திருந்த நிலையில், களமிறங்கிய 2வது பந்திலேயே சிக்சர் விளாசி பதிலடி கொடுத்தார் சஞ்சு சாம்சன். சிறப்பாக ஆடிய அவர் 41 பந்துகளில் 51 ரன்கள் விளாசி அசத்தினார்

இதன் மூலம் சூர்யகுமார் யாதவை விடவும் இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் வீரராக சஞ்சு சாம்சன் பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டம் பற்றி கைஃப் கூறுகையில், சஞ்சு சாம்சனின் ஆட்டம் என்னை அதிகமாக ஈர்த்துவிட்டது. கடந்த போட்டியில் சாம்சன் அழுத்தமான சூழல்களில் கூட சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோல் 4 மற்றும் 5 ஆகிய இடங்களில் சஞ்சு சாம்சன் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இதனால் உலகக்கோப்பைத் தொடருக்கு சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் களமிறக்கலாம். என்னை பொறுத்தவரை இஷான் கிஷனையோ அல்லது அக்சர் படேலையோ 4வது வீரராக விளையாட வைப்பது சரியாக இருக்காது. எந்த வீரரால் லெக் ஸ்பின்னை சிறப்பாக எதிர்கொள்ள முடியுமோ, அவர்களை 4வது வீரராக விளையாட வைக்க வேண்டும். அதில் சஞ்சு சாம்சன் சிறப்பாக இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வாழ்வா சாவா போட்டியின் முக்கியத்துவத்தை அறிந்து சஞ்சு சாம்சன் விளையாடி இருக்கிறார். அதேபோல் சஞ்சு சாம்சனால் சிறப்பாக விளையாட முடியவில்லை என்றால், அவரால் உலகக்கோப்பைத் தொடருக்கு தேர்வாக முடியாது என்பது தெரியும். அந்த சூழலிலும் சஞ்சு சாம்சனால் சிறப்பக விளையாட முடிந்திருப்பது தான் சிறப்பாக விஷயம்.

- Advertisement 2-

சஞ்சு சாம்சன் உலகக்கோப்பைக்கு தயாராகிவிட்டார் என்றே சொல்லுவேன். அதேபோல் இந்திய அணியின் செயல்பாடுகளை வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான சுற்றுப்பயணத்தை வைத்து முழுமையாக தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் உலகக்கோப்பைத் தொடருக்கு கூட தகுதி பெற முடியவில்லை.

அதனால் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் சிறந்த பிளேயிங் லெவனுடன் களமிறங்க வேண்டும். என்னை பொறுத்தவரை உலகக்கோப்பைக்கான அணியுடன் ஆசிய கோப்பையில் விளையாட வேண்டும். யார் பேக் அப் வீரர்கள், யார் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்பதை ஆசிய கோப்பையில் முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சற்று முன்