- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலியும் வேணாம், ஜெய்ஸ்வாலும் வேணாம்.. இவரு ஓப்பனிங் ஆடட்டும்.. டீமை மாத்தாமலே இந்த ஐடியா நல்லா...

கோலியும் வேணாம், ஜெய்ஸ்வாலும் வேணாம்.. இவரு ஓப்பனிங் ஆடட்டும்.. டீமை மாத்தாமலே இந்த ஐடியா நல்லா இருக்கே..

- Advertisement 1-

2020 மற்றும் 21 ஆகிய ஆண்டுகளில் எப்படி விராட் கோலி பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டாரோ அதேபோன்ற தடுமாற்றத்தை தான் தற்போது டி 20 உலக கோப்பை தொடரிலும் எதிர்கொண்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்கி வந்த விராட் கோலி, டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக பெரும்பாலும் மூன்றாவது வீரராக தான் களமிறங்கி வந்தார்.

ஆனால் இந்த முறை டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித்துடன் களமிறங்கி வந்த விராட் கோலி, 3 போட்டிகளில் முறையே 1, 4 மற்றும் 0 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக நான்கு சர்வதேச டி 20 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் முதல் முறையாக அவர் அவுட்டாகி அதிர்ச்சியும் அளித்துள்ளார்.

இதனால் விராட் கோலிக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களமிறக்க வைத்துவிட்டு மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அப்படி ஜெய்ஸ்வால் ஆடும் பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையிலோ அல்லது பந்து வீச்சிலோ ஏதாவது மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

ஏற்கனவே மூன்று போட்டிகளில் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் அருமையாக இருப்பதால் மாற்றங்களை உருவாக்குவதை விட்டுவிட்டு அணிக்குள் இருக்கும் வீரர்களையே பேட்டிங் வரிசையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜெய்ஸ்வால் மற்றும் கோலி என இருவரும் இல்லாமல் இன்னொரு வீரரை ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்குவது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளார்.

- Advertisement 2-

“மூன்றாவது வீரராக விராட் கோலி தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆட்டத்தின் சூழலை புரிந்து கொண்டு அவரது திறனை வெளிப்படுத்துவதற்கான நேரமும் அப்போது அதிகமாக இருக்கும். உலக கோப்பையில் மூன்றாவது வீரராக அவரது புள்ளி விவரங்கள் அருமையாக உள்ளது. இதனால் ஐந்தாவது இடத்தில் ஆடி மூன்றாவது இடத்தில் ரிஷப் பந்த் ஆடும் போது அவரே தொடக்க வீரராகவும் களமிறங்கலாம்.

மேலும் தொடக்க ஜோடியாக வலது – இடதுகை காம்பினேஷன் அமைவதுடன் மூன்றாவது வீரராக கோலியும், நான்காவது வீரராக சூர்யகுமார் யாதவும் வரலாம்” என முகமது கைஃப் கூறியுள்ளார். பலரும் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களமிறக்கலாம் என கூறி வரும் நிலையில், U 19 போட்டிகளில் தொடக்க வீரராக பேட்டிங் செய்த ரிஷப் பந்தை முகமது கைஃப் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்