கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த 16 வது ஆசிய கோப்பை இன்று பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் கோலாகலமாக துவங்கியது. பாக்கிஸ்தான் மற்றும் நேபால் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியை காண ரசிகர்கள் பலரும் வராததால் மைதானம் வெறிச்சோடி இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். காரணம் அந்த ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாகவும் இரண்டாவது பௌலிங் செய்பவர்களுக்கு பந்து வீச்சிற்கு ஏற்புடையதாகவும் மாறும் என்பதால் அவர் அத்தகைய ஒரு முடிவை எடுத்ததாக தெரிகிறது.
இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் பாகிஸ்தான் அணி சற்று தடுமாறியது என்றே கூற வேண்டும். துவக்க ஆட்டக்காரரான பக்கர் ஜமான் 16 ரன்களில் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து இமாம் உல் ஹக்கும் ஐந்து ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 25 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை பறிகொடுத்து பாகிஸ்தான் அணி தடுமாற்றமான ஒரு நிலையில் இருந்தது.
அதனைத் தொடர்ந்து பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றனர். இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 86 ரன்கள் எடுத்தனர். அணியின் ஸ்கோர் அப்போது 111 ஆக இருந்தது. ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்திருந்தார். அச்சமயம் அவர் ஒரு ரன் எடுக்க முயன்ற போது நான் ஸ்டிரைக்கர் எண்டில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். நேபால் வீரர் திபேந்திர சிங் பந்தை நேராக டெம்பில் அடித்து அவரை ரன் அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.
திபேந்திர சிங் ஸ்டம்பை நோக்கி அடித்த பந்து தன் மேல் பட்டு விடக்கூடாது என்பதற்காக ரிஸ்வான் சற்று எகிறியவாறு ஓடினார். அதன் காரணமாக அவரது பேட் கிரீஸில் படவில்லை. அதேசமயம் பந்து ஸ்டாம்ப்பில் பட்டு விட்டதால் அவர் ரன் அவுட் என அறிவிக்கப்பட்டார். ரிஸ்வானின் ரன் அவுட் பாபர் அசாமிற்கு சற்று எரிச்சல் ஊட்டியது என்றே கூற வேண்டும். அவர் அதை வெளிப்படுத்தும் வகையில் களத்திலேயே தனது தொப்பியை கழற்றி வீசினார்.
பாக்கிஸ்தான் அணியை பொறுத்தவரை பாபர் அசாம் 131 பந்துகளில் 151 ரன்கள் எடுத்தார். அதே போல இப்திகார் அகமது 71 பந்துகளில் 109 ரன்களை குவித்தார். 50 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்களை எடுத்தது குறிப்பிட தக்கது. இந்த நிலையில் ரிஸ்வான் ரன் அவுட் குறித்து பேசி உள்ள அஸ்வின், ஃபீல்டர் எரிந்த பந்து தன்மேல் பட்டுவிடக் கூடாது என்பதற்காக ரிஸ்வான் அவ்வாறு ஓடியிருக்கலாம் அதனாலேயே அவர் ரன் அவுட் ஆகி இருக்கக்கூடும் என்று நான் என்று எண்ணுகிறேன்.
பொதுவாகவே ரிஸ்வான் ரன் அவுட் ஆகக்கூடாது என்பதற்காக டைவ் அடிப்பார் ஆனால் இம்முறை அவ்வாறு செய்யாமல் விட்டுவிட்டார். ஒருவேளை ஹெல்மெட் அணியாததால் அவர் டைவ் அடிக்காமல் இருந்திருக்கலாம். அதற்கு காரணம் பாகிஸ்தானில் நிலவும் வெப்பமாகவும் இருக்கலாம். ஆனால் எப்படி இருந்தாலும் அவர் ஹெல்மெட் அணியாமல் ஆடியது சற்று விசித்திரமாகவே உள்ளது என்று கூறியுள்ளார் அஸ்வின்.