- Advertisement 3-
Homeவிளையாட்டுவிராட் கோலி தான் பெஸ்ட்.. பாராட்டிய முகமது ஷமி.. ரோஹித் பத்தி கடைசில ஒன்னு சொன்னாரு...

விராட் கோலி தான் பெஸ்ட்.. பாராட்டிய முகமது ஷமி.. ரோஹித் பத்தி கடைசில ஒன்னு சொன்னாரு பாருங்க..

- Advertisement-

தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலும் இளம் வீரர்கள் அதிகம் நிரம்பி வழிகின்றனர். இதனால், இரு தரப்பு தொடர்களிலும் வீரர்களைத் தேர்வு செய்வத்தில் பெரிய சிக்கலும், சவாலும் உள்ளது. அதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலும் கூட அதிக சவால்கள் நிறைந்திருக்கும் என்றே தெரிகிறது.

இப்படி இளம் வீரர்கள் அதிகம் நிறைந்துள்ள இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இவரை போலவே, இந்திய அணியின் சீனியர் வீரராக இருக்கும் விராட் கோலியும் பல இளம் வீரர்களுக்கு முன்னோடியாகவும் இருக்கிறார். உலக கோப்பை உள்ளிட்ட தொடர்களிலும் இந்த இரண்டு பேரின் ஆட்டமும் பல ஆண்டுகளுக்கு நின்று பேசக்கூடிய அளவுக்கும்.அமைந்திருந்தது.

- Advertisements -

இதனிடையே, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரை பற்றி இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்த கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் அச்சுறுத்தல் நிறைந்த அதிவேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமி, கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் விளையாடி இருந்தார்.

முதல் சில போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காத சூழலில் அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட முகமது ஷமி, உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தொடர்களில் ஓய்வில் இருந்த முகமது ஷமி, தற்போது காயத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் தொடர்ந்து ஓய்வில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

- Advertisement-

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் காயம் காரணமாக தேர்வாகாமல் இருந்த முகமது ஷமி, மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்க மாட்டார் என்றே தெரிகிறது.

இதனிடையே முகமது ஷமியிடம் உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொன்ன அவர், “விராட் கோலி தான் உலகிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன். இவர் ஏராளமான சாதனைகளை அடித்து நொறுக்கி உள்ளார். என்னை பொருத்தவரையில் விராட் கோலி தான் சிறந்த வீரர். ஆனால் உலகிலேயே மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன் யாரென்று என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் ரோஹித் ஷர்மாவை தான் சொல்வேன்” என முகமது ஷமி குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்