Homeகிரிக்கெட்அவரு நினைச்சாலும் நிறுத்த முடியாது.. களத்தில் கோலி செஞ்ச விஷயம்.. நினைவுகூர்ந்த முகமது ஷமி..

அவரு நினைச்சாலும் நிறுத்த முடியாது.. களத்தில் கோலி செஞ்ச விஷயம்.. நினைவுகூர்ந்த முகமது ஷமி..

-Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கலக்கிக் கொண்டிருக்க, இவரை போலவே வேகப்பந்து வீச்சில் இந்திய அணியின் மற்றொரு துருவமாக இருப்பவர் தான் முகமது ஷமி. இவர் கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில், முதல் சில போட்டிகளில் அணியில் இடம் பிடிக்காமல் இருந்தார்.

ஆனால், ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலக, அவருக்கு பதிலாக உள்ளே வந்த முகமது ஷமி, அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்தார். மேலும் உலக கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முகமது ஷமி, இறுதி போட்டியிலும் கூட சிறப்பாக பந்து வீசி ஓரளவுக்கு இந்திய அணி வெற்றி பெறும் அளவுக்கு நம்பிக்கையையும் கொடுத்திருந்தார்.

-Advertisement-

ஆனால், பின்னர் டிராவில் ஹெட் போட்டியின் விதியை மாற்றி எழுத இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இருந்தும் முகமது ஷமி உலக கோப்பைத் தொடரில் கலக்கியதை பலரும் பாராட்டவும் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, காயம் காரணமாக தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமலும் அவர் இருந்து வருகிறார்.

முன்னதாக உலக கோப்பைத் தொடரிலும் தான் காயத்தால் பாதிக்கப்பட்ட போதிலும் கூட, இந்திய அணிக்காக பந்து வீசி இருந்தது பின்னர் தெரிய வந்திருந்தது. காயத்தில் இருந்து இன்னும் ஷமி மீள்வதற்கு நேரமாகும் என்பதால், இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதமுள்ள 3 டெஸ்டிலும் அவர் இடம்பெறுவது சந்தேகம் தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

-Advertisement-

இதனிடையே, முகமது ஷமி அளித்த பேட்டி ஒன்றில், ரோஹித் மற்றும் கோலி குறித்தும், உலக கோப்பைத் தொடரில் தனது வாய்ப்பு பற்றியும், இந்திய அணியின் கேப்டனாக விருப்பம் இருப்பது பற்றியும் பல்வேறு விஷயங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், விராட் கோலியை உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் என புகழாரம் சூட்டிய முகமது ஷமி, அவரை பற்றி மற்றும் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். “விக்கெட் எடுக்கும் பவுலர்களை விட அதனை அதிகமாக விராட் கோலி கொண்டாடுவார். நீங்கள் பந்து வீச்சாளர் ஆகாமல் போனது நல்லது தான் என நான் பலமுறை அவரிடம் கூறியுள்ளேன். அப்படி செய்வதை அவர் அதிகம் விரும்புகிறார்.

அது அவரது பழக்கமாகவும், ஸ்டைலாகவும் உள்ளது. அவர் நினைத்தாலும் அதனை இனி நிறுத்த முடியாது. அவர் ஸ்டம்புக்கு மேல் துள்ளி விக்கெட்டைக் கொண்டாடும் புகைப்படத்தை காண்பித்து, ‘இது எனது விக்கெட். என்னது இது?’ என கேட்ட போது, ‘அதை மறந்து விடுங்கள்’ என ஜாலியாக கூறினார் விராட் கோலி” என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்