நாங்க முன்னாடியே ஸ்கெட்ச் போட்டு தான் சூர்யகுமாரின் விக்கெட்டை எடுத்தோம். இது தான் அந்த ஸ்கெட்ச் – மனம் திறந்த மோஹித் ஷர்மா

- Advertisement -

நேற்றைய போட்டி ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத ஒரு ஹை வோல்டேஜ் போட்டியாக அமைந்திருக்கும். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 233 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் எட்டியது.  அவர் 60 பந்துகளில் 129 ரன்களை சேர்த்தார்.

234 ரன்கள் இலக்கு என்றாலும் அதை மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக விட்டுவிடாது என்பது ஐபிஎல் ரசிகர்களுக்கு தெரியும். அதிலும் அந்த அணி கொண்டிருக்கும் வீரர்களை பார்க்கும் போது கடைசி பந்து வரை போராடும் என ரசிகர்கள் ஆர்வமாக போட்டியைப் பார்த்தனர்.

- Advertisement -

அதற்கேற்றார் போல அந்த அணியின் சூர்யகுமார் யாதவ் களத்தில் இருந்தவரை போட்டி இன்னும் முடியவில்லை என்றே அனைவரும் நினைத்த நிலையில் குஜராத் அணியின் பவுலர் மோஹித் ஷர்மா வந்து வெறும் 14 பந்துகளே வீசி 5 விக்கெட்களை சாய்த்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆறாவது கோப்பையை வெல்லும் கனவை பகல் கனவாக்கினார்.

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியது பற்றி போட்டி முடிந்ததும் பேசிய மோஹித் ”இவ்வளவு குறைவான பந்துகளில்  ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது என்னுடைய அதிர்ஷ்டம்தான். பந்து நன்றாக சறுக்கி சென்றது. ஆனால் சூர்யகுமார்  மற்றும் திலக் பேட்டிங் செய்த விதத்தைப் பார்க்கும் போது அவர்கள் அவுட் ஆகவில்லை என்றால் ஆட்டம் எங்களிடம் இருந்து நழுவக்கூடும் என்பதை உணர்த்தியது. நான் சூர்யவுக்கு எதிராக பந்துவீசினால், நான் அதிகம் பரிசோதனையான பந்துகளை செய்யாமல் லெந்த் பந்துகளையே வீசுவேன் என்று முடிவு செய்திருந்தேன்.

- Advertisement -

சூர்யாவுக்கு எதிராக அதிகம் வித்தியாசமான முயற்சிகளை செய்யக்கூடாது, அது அவருக்கு விஷயங்களை மேலும் எளிதாக்கிவிடும் என்று நாங்கள் போட்டிக்கு முந்தைய கூட்டத்தில் விவாதித்தோம். எனவே நீளமான(லெந்த்) பந்துகளை வீச வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதில் அவர் ஆறு சிக்ஸர்களை அடித்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் லெந்த் பந்துகளில் ஷாட்களை விளையாடுவது அவருக்கு மிகவும் கடினமான ஒன்று என்று நாங்கள் உணர்ந்தோம்.

இதையும் படிக்கலாமே: ஆகாஷ் மத்வாலின் பந்து வீச்சால் அவருக்கு இதில் தடை விதிக்கப்பட்டது. மும்பை போட்டியை நாங்கள் ஆவலாக பார்த்தோம். ரகசியம் பகிர்ந்த ஆகாஷின் நண்பர்

அவர் களத்தில் இருந்தவரை போட்டி முடியவில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் சூர்யாவின் விக்கெட் விழுந்த பிறகுதான் போட்டி எங்கள் கைகளுக்கு வந்தது என அர்த்தமாயிற்று. அந்த விக்கெட்டை வீழ்த்தியது பெரிய நிம்மதி. அந்த கடைசி விக்கெட்டுக்குப் பிறகுதான் இறுதிப் போட்டியை நாங்கள் விளையாட போகிறோம் என்ற காட்சி எங்கள் முன் வந்தது.  நாங்கள் இதற்கு முன்பு குழப்பமான சூழ்நிலைகளில் இருந்து கேம்களை வென்றும் இருக்கிறோம், தோற்றும் இருக்கிறோம்., எனவே அதனால் போட்டி முடியும் வரை எதுவும் உறுதியில்லை” என பேசியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்