Homeகிரிக்கெட்WTC பைனலில் மாஸ் காட்டிய சிஎஸ்கே ரசிகர்கள். தோனியையும், ஜடேஜாவையும் புகழும் வகையில் பதாகைகள் ஏந்திய...

WTC பைனலில் மாஸ் காட்டிய சிஎஸ்கே ரசிகர்கள். தோனியையும், ஜடேஜாவையும் புகழும் வகையில் பதாகைகள் ஏந்திய ரசிகர்கள் கூட்டம். குதூகலத்தில் மற்ற சிஎஸ்கே பேன்ஸ்

-Advertisement-

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தனது ஐந்தாவது ஐபிஎல் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இந்த வெற்றியானது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் சிஎஸ்கே ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதை ரசிகர்களும் பல்வேறு விதமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படியான ஒரு வெளிப்பாட்டை தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியிலும் ரசிகர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோகித் சர்மா டாசை வென்று முதலில் பவுலிங் செய்ய தேர்ந்தெடுத்தார். அதன்படி முதல் நாள் போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களை குவித்துள்ளது. இதில் ட்ரவிஸ் ஹெட் அபாரமாக ஆடி 156 பந்துகளில் 146 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். அதேபோல் ஸ்மித் 227 பந்துகளை சந்தித்து 95 ரன்கள் குறித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

-Advertisement-

இப்படி இந்த WTC பைனல் போட்டி நடந்து கொண்டிருக்கையில், முதல் நாள் போட்டியில் சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் அணி வீரர்களை கௌரவிக்கும் வகையில் கைகளில் பதாகைகளை ஏந்தி காட்சியளித்தனர். அதில் ஒரு பதாகையில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் என்ன நடந்தது என்பதை குறிப்பிட்டு, அந்த ஆறு பந்துகளில் ஒவ்வொரு பங்கிற்கும் எத்தனை ரன்கள் எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக எழுதி உள்ளனர்.

முதல் பந்தில் பூஜ்ஜியம். இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் தலா ஒரு ரன்கள். ஐந்தாவது பந்தில் ஆறு ரன்கள் மற்றும் ஆறாவது பந்தில் நான்கு ரன்கள். இப்படியாக குறிப்பிட்டு தேங்க்யூ ஜடேஜா என்று எழுதியுள்ளனர். அதேபோல் 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய வருடங்களையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஐந்து வருடங்களும் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

அதேபோல் மற்றொரு பதாகையில் கமான் இந்தியா என்று குறிப்பிட்டு, அதோடு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் சிறப்பான நன்றிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த என்னுடைய தலைக்கு எனது சிறப்பான நன்றிகள் என்று குறிப்பிட்டு, பெருமைமிகு தோனி ரசிகன் என்று அந்தப் பதாகையில் அந்த ரசிகர் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிக்கலாமே: இந்தியாவுக்கு வந்து உலகக்கோப்பை தொடர்ல விளையாட நாங்க தயார். ஆனா ஒரு கண்டீஷன். இந்த ஸ்டேடியத்துல போட்டிகள நடத்தக் கூடாது – பாக். கிரிக்கெட் வாரியம் வைத்த ட்விஸ்ட்

சிஎஸ்கே ரசிகர்களின் இத்தகைய செயல்களை கண்டு மற்ற சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படியாக ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்து பல நாட்கள் ஆன நிலையிலும் சிஎஸ்கே ரசிகர்கள் அதை இன்னும் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டமானது இன்னும் பல்வேறு போட்டிகளிலும் தொடர்ந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-Advertisement-

சற்று முன்