இந்திய கிரிக்கெட்டின் ஒப்பற்ற தலைவராக விளங்குபவர் மகேந்திர சிங் தோனி. ஆனால் அந்த தலைக்கனத்தை கொஞ்சம் கூட தலையில் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். பொதுவாக நாம் எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் கூகுள் மேப் போட்டு ரூட்டை தேடி கண்டுபிடித்து செல்வது வழக்கம்.
அதுவும் போன தலைமுறையில் இருப்பவர்கள் சாலையில் சென்று கொண்டிருப்பவர்களை நிறுத்தி வழியைக் கேட்டு செல்வார்கள். ஆனால் ஒரு மிகப்பெரிய பிரபலம் காரில் வழி தெரியாமல் நின்றால் ஒன்று கூகிள் மேப்பை பயன்படுத்துவர். இல்லை அவரின் உதவியாளரை விட்டு அட்ரஸை தேடி கண்டுபிடிக்க சொல்வார்கள்.
ஆனால் தோனி என்ன செய்தார் தெரியுமா? காரை நிறுத்தி சாலையில் இருந்த ஊர் மக்களை அழைத்து இந்த இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என சர்வ சாதாரணமாக கேட்டார். திடீரென்று தோனியை பார்த்ததும் அங்கு இருந்தவர்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
இது கனவா நிஜமா என்று தங்களையே கிள்ளி பார்த்துக்கொண்டு தோனி கேட்டதற்கு பணிவுடன் வழியை சொல்லி அனுப்பினார்கள். மேலும் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தோனி அந்த இளைஞர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு கைகுலுக்கி நன்றி தெரிவித்தார்.
தோனியின் இந்த குணம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அடுத்த ஐபிஎல் சீசனுக்காக தோனி காத்துக் கொண்டிருக்கிறார். அந்த தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பதை டிசம்பர் மாதம் தான் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் தோனி.
Asking directions from Random strangers >> Google maps
MS Dhoni is literally us
Also he’s listening to Deva Deva 🫡 pic.twitter.com/PHK3Df5Fre
— BALA (@rightarmleftist) August 11, 2023
தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டும் ராஞ்யின் தனது நண்பர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருகிறார். அப்படி செல்லும்போதெல்லாம் தன்னிடம் இருக்கும் பழைய மாடல் கார்களை எடுத்து அவரே ஒட்டி செல்கிறார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தோனி இதுபோல் சாதாரணமாக நடந்து கொள்ளும் வீடியோ நான்கு ஐந்து வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியிருக்கிறது.