- Advertisement -
Homeவிளையாட்டுதிரும்ப வந்த வின்டேஜ் தோனி.. மேட்ச் தோத்தாலும் கெத்தாக ஃபயர் விடும் சிஎஸ்கே ரசிகர்கள்.. அவரு...

திரும்ப வந்த வின்டேஜ் தோனி.. மேட்ச் தோத்தாலும் கெத்தாக ஃபயர் விடும் சிஎஸ்கே ரசிகர்கள்.. அவரு அடிச்ச அடி அப்படி..

- Advertisement-

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அனிகளுக்கு எதிராக தொடர்ந்து சொந்த மைதானத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களின் மூன்றாவது போட்டியில் டெல்லியின் ஹோம் மைதானமான விசாகப்பட்டினத்தில் அவர்களை எதிர் கொண்டிருந்தனர். முன்னதாக முதல் இரண்டு போட்டிகளில் பெங்களூர் மற்றும் குஜராத் அணியை போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்தி மிகவும் அசால்டாக டீல் செய்து வெற்றி கண்டிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஆனால் மூன்றாவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்வது அத்தனை எளிதாக சிஎஸ்கே அணியினருக்கு அமையவில்லை. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் எடுத்திருந்தது.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியில் இணைந்த ப்ரித்வி ஷா, டேவிட் வார்னருடன் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். டேவிட் வார்னர் 52 ரன்களும், பிரித்வி ஷா 43 ரன்களும் எடுத்து அவுட்டாக, முதல் இரண்டு போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்த அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 53 ரன்கள் எடுத்திருந்தார்.

சென்னை அணி தரப்பில் பதிரானா 3 விக்கெட்டுகளை எடுத்திருந்த நிலையில், கடின இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்திருந்தது. முதல் இரண்டு போட்டியில் சிறப்பாக ஆடி வந்த தொடக்க வீரர்களான ருத்துராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே தடுமாறி அவுட்டாகி இருந்தனர்.

- Advertisement-

ருத்துராஜ் ஒரு ரன்னில் முதல் ஓவரிலேயே அவுட்டாக, ரச்சின் ரவீந்திரா 12 பந்துகள் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். இதன் பின்னர் ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் நிதானமாக ஆடி ரன் சேர்க்க, தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளை மட்டுமே அடித்தனர். ஆனாலும் இன்னொரு பக்கம் தேவைப்படும் ரன் ரேட் அதிகமாகி கொண்டே இருந்ததால் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பும் கடினமானது.

மேலும் டேரில் மிட்செல் மற்றும் ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக, சென்ற போட்டியில் ரஷீத் பந்தில் 2 சிக்ஸர்கள் அடித்து கவனம் ஈர்த்த சமீர் ரிஸ்வி, முதல் பந்தில் கோல்டன் டக் ஆனார். கடைசி 6 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 89 ரன்கள் தேவைப்பட ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, துபேவும் அவுட்டாக இந்த சீசனில் முதல் முறையாக பேட்டிங் செய்ய களமிறங்கினார் தோனி.

முதல் பந்திலேயே ஃபோர் அடித்து தொடங்கிய அவர், கலீல் அகமது பந்தில் சிக்ஸர் ஒன்றை பறக்க விட்டிருந்தார். ஆனாலும் கடைசி இரண்டு ஓவர்களில் 46 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்ததால், சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் இந்த போட்டியில் தோனியின் பேட்டிங் வின்டேஜ் ஸ்டைலில் இருப்பதாக சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மொத்தம் 16 பந்துகள் சந்தித்த அவர் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்