- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த பரிசுக்கு நன்றி.. இந்தியாவை வாழ்த்திய பதிவில் எடிட் செய்து.. கூடுதலாக தோனி சேர்த்த எமோஷனல்...

இந்த பரிசுக்கு நன்றி.. இந்தியாவை வாழ்த்திய பதிவில் எடிட் செய்து.. கூடுதலாக தோனி சேர்த்த எமோஷனல் வரிகள்..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பையை வென்ற ஒரே கேப்டனாக இருந்து வருபவர் தான் தோனி. அவர் கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்திருந்தார். ஆனால் அதன் பின்னர் ரோஹித், கோலி உள்ளிட்ட பல தலைச்சிறந்த வீரர்களை இந்திய அணி கண்டபோதிலும் நிறைய ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் பரிதாபமாக தோல்வியடைந்து வெளியேறி இருந்தது.

தொடர்ச்சியாக ஐசிசி கோப்பை மீதான மோகம் மட்டும் இந்திய ரசிகர்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில், அதற்கு தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ரோஹித் தலைமையிலான இந்திய அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கோலியின் 76 ரன்கள் உதவியுடன் 176 ரன்கள் எடுக்க பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்காவின் கைதான் அதிகம் ஓங்கி இருந்தது.

ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மேஜிக் செய்ய தென்னாபிரிக்க அணி 7 ரன்களில் பரிதாபமாக தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதல் ஐசிசி தொடரிலேயே கோப்பையை வெல்லும் அழகான வாய்ப்பை பறிகொடுத்திருந்தது. இன்னொரு பக்கம் 11 ஆண்டுகளாக இந்தியாவின் கைக்கு சிக்காமல் இருந்த ஐசிசி கோப்பை, ரோஹித் தலைமையில் வந்து சேர, ஒட்டுமொத்த இந்தியாவே இதனை பெரிதாக கொண்டாடி தீர்த்து வருகிறது.

ரோஹித் தலைமை, கோலியின் பேட்டிங், இந்திய அணி பந்துவீச்சு என பல விஷயங்கள் அவர்களுக்கு இந்த முறை சாதகமாக அமைய எந்த அணியாலும் இந்தியாவை தொட்டுப் பார்க்க முடியாமல் போனது. இதனிடையே இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ள நிகழ்விற்கு பல கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement 2-

அப்படி ஒரு சூழலில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்த தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவை வாழ்த்தி மெசேஜ் ஒன்றை பகிர்ந்துள்ளார். “உலக கோப்பை சாம்பியன்ஸ் 2024. எனது ஹார்ட் பீட் அவ்வபோது ஏறி இறங்கி இருந்தது. ஆனால் மிக நிதானமாக, தன்னம்பிக்கையுடன் ஆடி நீங்கள் கோப்பையை சொந்தமாக்கி விட்டீர்கள். உலகெங்கும் இருக்கும் இந்தியர்களின் சார்பாக உலகக்கோப்பையை மீண்டும் கொண்டு வந்ததற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள். மேலும் எனது பிறந்த நாளில் விலைமதிப்பற்ற இந்த பரிசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் தோனி.

தோனியின் பிறந்தநாள் ஜூலை ஏழாம் தேதி. அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இந்திய அணி உலக கோப்பை வென்றுள்ளது. அதனை தனது பதிவில் ஆரம்பத்தில் குறிப்பிடாத தோனி, பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பதிவை எடிட் செய்து விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

சற்று முன்