இந்திய கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருக்கும் மகேந்திர சிங் தோனிக்கு எந்தெந்த உணவுகள் பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? அதைத்தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். கிரிக்கெட் வீரராக சாதிக்க வேண்டும் என்றால் உணவு பழக்கம் என்பது மிகவும் அவசியமானது.
ஆனால் நம் தோனி கிட்டத்தட்ட பேலியோ டயட் போன்ற தான் ஒரு உணவு வகையை பாலோ செய்து வருகிறார். இனிப்புகள் மூலம்தான் அதிக கெடுதல் உடலுக்கு ஏற்படுகிறது என்று அடிக்கடி சொல்லும் தோனி தன்னுடைய உணவு வகைகளின் இனிப்புகளை சேர்ப்பதே விட்டுவிட்டாராம்.
இதேபோன்று தோனிக்கு பால் வகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் விளையாடும் போது தினமும் 4 லிட்டர் பால் குடிப்பேன் என்று தோனி கூறிய பேச்சு அப்போது மிகவும் பிரபலம். அதே தோனி தான் தற்போது பால் குடிப்பது நிறுத்திவிட்டேன்.
அதற்கு விலைவாசி தான் காரணம் என்றும் சொல்லி ஜோக் அடித்தார். இந்த நிலையில் தோனிக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கன் வகைகளை நீங்கள் எப்படி செய்தாலும் அது தோனிக்கு கொள்ளை பிரியமாம். இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது பட்டர் சிக்கன் தான்.
பட்டர் தடவி எண்ணெய் இல்லாமல் தோனி இந்த உணவு வகையை சாப்பிடுவாராம். பெரிய கிரிக்கெட் தொடர் வரும்போது அதிக சிக்கன்களை சாப்பிடுவதையும் தோனி தவிர்த்து விடுவாராம். இதேபோன்று தோனிக்கு சிக்கன், டிக்கா பிஷா மிகவும் பிடிக்குமாம்.
சிக்கன் இருக்கும் பீட்சாவை விரும்பி சாப்பிடுவாராம். பீட்சா என்று ஆர்டர் செய்தாலே தோனி இதுதான் வாங்குவார் என அவருடைய நண்பர்களும் பலமுறை கூறியிருக்கிறார்கள். தோனிக்கு இதேபோன்று பாயாசம் மிகவும் பிடிக்கும். அதில் முந்திரி பருப்பு போட்டு இருந்தால் அவ்வளவு பிரியமாம்.
இதேபோன்று அரபிய உணவு வகையான கெப்பாவும் தோனிக்கு அவ்வளவு பிரியமாம். அதிலும் தோனி சிக்கன் வகையிலான கெப்பாவை தான் விரும்பி சாப்பிடுவாராம். இதேபோன்று தோனிக்கு மிகவும் பிடித்தது கஜர் அல்வாவாம். அதுவும் வீட்டில் செய்த அல்வாவை யார் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்ல மாட்டாராம். இதேபோன்று தோனிக்கு ஹாட் சாக்லேட்டுகள் அதிக அளவில் பிடிக்குமாம்.