- Advertisement -
Homeவிளையாட்டுநீ எதுக்கு இந்த கேவலமான ஷாட் ஆடுன? கோலியை முறைத்த தோனி - இஷாந்த் சர்மா...

நீ எதுக்கு இந்த கேவலமான ஷாட் ஆடுன? கோலியை முறைத்த தோனி – இஷாந்த் சர்மா பகிர்ந்த தகவல்

- Advertisement-

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இந்திய அணிக்காக கேப்டனாக அவர் களத்தில் எடுக்கும் முடிவுகளும், ஃபினிஷராக களமிறங்கி அடிக்கும் சிக்ஸர்களும், போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தைக் கொண்டு செல்லும் அவருடைய திறனும் என பன்முகத்தன்மை கொண்ட அவருக்கு என ரசிகர்கள் மத்தியில் கூல் கேப்டன் என்ற பெயரும் தோனிக்கு உள்ளது.

ஜார்கண்டில் பிறந்து வளர்ந்த தோனி முதல் இந்திய கேப்டனாக அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்றுத்தந்த மாபெரும் கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். எவ்வளவு பெரிய அழுத்தம் நிறைந்த போட்டியாக இருந்தாலும் போட்டியின் சூழலுக்கு ஏற்ப வீரர்களின் திறனை வெளிக்கொணந்து மிகச் சிறப்பான வெற்றிகளை பெற்று தந்துள்ள டோனி அவரது கூலான அணுகுமுறை காரணமாகவே இன்றளவும் அதிகளவில் ரசிகர்கள் விரும்பும் கேப்டனாக இருந்து வருகிறார்.

ஆனால் களத்தில் ஒருசில முறை அவர் தனது பொறுமையை இழந்து கோபப்பட்டது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் சில சம்பவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா தோனி தனது பொறுமையை இழந்த ஒரு தருணம் பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி உள்ளது.

அந்த வகையில் இஷாந்த் சர்மா கூறியதாவது : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருமுறை நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி சீரற்ற முறையில் விளையாடி ஆட்டமிழந்து வெளியேறினார். அதனால் தோனி அவரின் பொறுமையை இழந்து அவரிடம் சற்று கடிந்து பேசினார். அந்தப் போட்டி ஷிகர் தவானின் முதல் போட்டியாகவும் இருந்தது.

- Advertisement-

அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. நாங்கள் அந்த போட்டியில் எப்படியோ வெற்றி பெற்றிருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸின்போது மிகவும் தடுமாறினோம். அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது ஷிகர் தவான் கட்டைவிரல் எலும்பு முறிவு காரணமாக பேட்டிங் செய்ய முடியாமல் போனது.

அந்த சூழ்நிலையில் தான் கோலி தேவையில்லாத ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்திற்கு பிறகு தோனி விராட் கோலியிடம்: நமது அணியில் பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறை இருப்பது உனக்கு தெரிந்தும் நீ ஏன் அந்த ஷாட்டை விளையாட முயற்சித்தாய்? என கேள்வி எழுப்பினார். அவர் அதை கோவமாக கேட்கவில்லை என்றாலும் அவரது வார்த்தையில் இருந்த அழுத்தத்தை கோலி உணர்ந்து இருப்பார் என இஷாந்த் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்