- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் ரெக்கார்ட் காலி.. பேட்டிங் செஞ்ச முதல் மேட்ச்லயே தோனி செஞ்ச தரமான சாதனை..

ரோஹித் ரெக்கார்ட் காலி.. பேட்டிங் செஞ்ச முதல் மேட்ச்லயே தோனி செஞ்ச தரமான சாதனை..

- Advertisement-

சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி ஆடிய முதல் இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்றிருந்தது. பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே டாப் ஃபெர்பார்மன்ஸை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருந்தது. அப்படி ஒரு சூழலில் முதல் முறையாக இந்த தொடரில் தங்கள் சொந்த மைதானத்தை விட்டு வேறொரு மைதானத்தில் அதாவது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினம் மைதானத்தில் ஆடி இருந்தது சிஎஸ்கே.

சென்னை எப்படி முதல் இரண்டு போட்டிகளில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செய்தார்களோ அதேபோல இந்த முறை டெல்லி அணி, சென்னையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சென்னையின் பந்து வீச்சும் பெரிதாக எடுபடாமல் போக 191 ரன்களை டெல்லி குவித்திருந்தது.

- Advertisements -

பந்து வீச்சு சொதப்பி இருந்தாலும் பேட்டிங்கில் பலரும் இருப்பதால் நிச்சயம் அவர்களை வைத்து வென்று விடலாம் என்று சிஎஸ்கே ரசிகர்கள் மனக்கணக்கு போட்டனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த எந்த வீரருமே அடிக்காத நிலையில் ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஆகிய இருவரும் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆனால் அதுவும் நீண்ட நேரம் நிலைக்காமல் போக, பின்னர் வந்த ஜடேஜா மற்றும் ஷிவம் துபே கூட ரன் சேர்க்க தடுமாறினர்.

கடைசி ஐந்து ஓவருக்கு முன்பாகவே சிஎஸ்கே அணி தோல்வி ஏறக்குறைய உறுதியான நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கடைசி ஓவர்களில் பேட்டிங் இறங்க வந்த தோனி, 16 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு ஃபோர்களுடன் 37 ரன்கள் அடித்திருந்தார்.

- Advertisement-

அதிலும் கடைசி ஓவரில் 40 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட போது நோர்ஜே வீசிய அந்த ஓவரில் இரண்டு ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 20 ரன்கள் அடித்திருந்தார். சிஎஸ்கே அணி தோற்றதையே ரசிகர்கள் மறந்து விட்டு தோனியின் பேட்டிங்கை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டுமே தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வரும் தோனி, மீண்டும் வின்டேஜ் ஃபார்முக்கு வந்துள்ளதாகவும் ரசிகர்கள் உற்சாகத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதனால் இனிவரும் போட்டிகளிலும் நிச்சயம் தோனிக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தால் அவர் இது போன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஒரு சூழலில் தான் ரோஹித் ஷர்மாவின் முக்கியமான ஒரு சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார் தோனி.

அதாவது ஐபிஎல் தொடரில் ஒரு ஓவரில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அதிக முறை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் எட்டு முறை அடித்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டனர். அப்படி இருக்கையில் தான் தற்போது நோர்ஜே ஓவரில் 20 ரன்கள் அடித்ததன் மூலம் ரோஹித்தை ஓவர்டேக் செய்து 9 முறை ஒரே ஓவரில் 20 ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சொந்தமாகி உள்ளார் தோனி.

அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் 19 மற்றும் 20 வது ஓவரில் சேர்த்து 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் 57 சிக்ஸர்களுடன் பொல்லார்ட் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்