- Advertisement -
Homeவிளையாட்டுதோனிக்கு முழுசா எப்போ கால் சரியாகும்னு சொல்ல முடியாது. ஆனா கொறஞ்சது இத்தனை மாசம் ஆகும்...

தோனிக்கு முழுசா எப்போ கால் சரியாகும்னு சொல்ல முடியாது. ஆனா கொறஞ்சது இத்தனை மாசம் ஆகும் என கூறிய மருத்துவர்கள். அவர் எப்போ டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? எந்த மருத்துவமனை – முழு விவரம்

- Advertisement-

ஐபிஎல் 2023 சிறப்பாக நடந்து முடிந்து அதில் சிஎஸ்கே ஒரு தரமான வெற்றியை பெற்றுள்ளது. தோனியின் தலைமையிலான இந்த அணி எவ்வளவு சிறப்பாக செயல்பட்டதோ அதே அளவுக்கு தோனியின் கேப்டன்சீயும் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்றே கூறலாம். அதோடு தோனியின் எல்லோ படை அவர் எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்தது. அதனால் எல்லா ஸ்டேடியமும் எல்லோ ஸ்டேடியம் ஆக மாறி இருந்தது.

இந்த ஐபிஎல்-ஐ பொறுத்தவரை தோனி மூட்டு வலி காரணமாக பெரிதும் அவஸ்தைப்பட்டு வந்தார். அவர் 20 ஓவர்கள் கீப்பிங் செய்தாலும் பேட்டிங்கை பொருத்தவரை அவர் கடைசி சில ஓவர்களை மட்டுமே ஆடினார். அதிலும் அவருக்கு ரண்களை ஓடி எடுப்பது சற்று சிரமமாகவே இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் முடிந்த பிறகு அவருக்கு மூட்டு வலி சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தான் தோனிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சையை பத்ரிவாலா என்ற மருத்துவர் தான் செய்தார். ரிஷப் பண்டிற்கும் இதே மருத்துவர் தான் அறுவை சிகிச்சை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியின் மருத்துவரான மது என்பவர் தோனியை பார்த்துக் கொள்வதற்காக மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் தோனியை பற்றி கூறுகையில், அவர் எப்போது முழுமையாக குணமடைவார் என்பது தெரியாது. ஆனால் இரண்டு மாதங்களில் அவருக்கு ஓரளவிற்கு சரியாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினர். இதன் அடிப்படையில் பார்த்தால் தோனி இன்னும் குறைந்தது இரண்டு மாதங்களாவது தனது காலை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிகிறது.

- Advertisement-

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் க்ரிக்பஸ்க்கு அளித்த பேட்டியில் நான் தோனியிடம் அறுவை சிகிச்சைக்கு பிறகு பேசினேன். என்னால் அது எது போன்ற அறுவை சிகிச்சை என்பதை கூற இயலாது. எங்களிடம் அது கீ ஹோல் அறுவை சிகிச்சை என்று சொன்னார்கள். அவர் நலமாக தான் உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

தோனி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்: இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தோனியின் உடல் நிலையும் சீராக உள்ளது. ஆனாலும் அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து அவர் டிஸ்ட்ரிக்ட் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: சாய் சுதர்சன பத்தி 2 வருசத்துக்கு முன்னாடி அஸ்வின் போட்ட அந்த ஒரு ட்வீட் . கரெக்ட் டைம்ல இப்போ அதை பகிர்ந்த உத்தப்பா.

ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது தோனி பேசுகையில் என் உடல் ஒத்துழைத்தால் நான் அடுத்த வருடம் நிச்சயம் ஐபிஎல் ஆடுவேன். அது நான் ரசிகர்களுக்கு கொடுக்கும் ஒரு பரிசு என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தோனியின் அறுவை சிகிச்சை குறித்து கேள்விப்பட்ட பிறகு அவரது ரசிகர்கள், கடவுளே தோனி எப்படியாவது விரைவில் குணமடைய வேண்டும் அவர் விரைவாக குணமடைந்தால் தான் அடுத்த ஐபிஎல்லில் அவர் சிறப்பாக ஆட முடியும் என பிரார்த்திக்க துவங்கி உள்ளனர்.

சற்று முன்