- Advertisement 3-
Homeவிளையாட்டுஆக்ரோஷமா சிக்ஸ் அடிச்சு.. கிளம்பிய வேகத்தில் மும்பை ரசிகைக்காக தோனி செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்த ரசிகர்கள்..

ஆக்ரோஷமா சிக்ஸ் அடிச்சு.. கிளம்பிய வேகத்தில் மும்பை ரசிகைக்காக தோனி செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்த ரசிகர்கள்..

- Advertisement 1-

ரோஹித் ஷர்மா 150 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தாலும் அதனை விட தோனி அடித்த அந்த 20 ரன்கள் பற்றியும் மூன்று சிக்ஸர்கள் பற்றியும் தான் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக பேசி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாகவே தோனி பெரிய அளவில் பேட்டிங்கில் சோபிக்கவில்லை என ஒரு மிகப்பெரிய விமர்சனம் இருந்து வந்தது.

அப்படி இருக்கையில், இந்த சீசனில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சிக்ஸர்களாக மாற்றி வருகிறார் தோனி. டெல்லிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்திருந்தாலும் அந்த போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அனைவரையும் மிரள வைத்திருந்தார் தோனி. மேட்ச் தோற்றதை மறந்து விட்டு ரசிகர்கள் அனைவரும் தோனியின் பேட்டிங்கை கொண்டாட தொடங்கி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நான்கு பந்துகளில் களமிறங்கி இருந்த தோனி, ஹர்திக் பாண்டியா வீசிய பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் மொத்தம் 20 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் சென்னை அணியின் ரன்னும் 206 ரன்களாக மாற இலக்கை நோக்கி ஆடி இருந்த மும்பை அணியில் ரோகித் ஷர்மாவின் சதம் மட்டும் தான் ஆறுதலாக அமைந்துள்ளது.

மற்ற வீரர்கள் யாருமே சிறப்பான பங்களிப்பை அளிக்காததன் காரணமாக அந்த அணி 186 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தது. பதிரானாவின் பந்து வீச்சும் சென்னை அணிக்கு கை கொடுக்க இருபது ரன்கள் வித்தியாசத்தில் அவர்கள் எதிரணியின் மைதானத்தில் முதல் வெற்றியையும் இந்த தொடரில் ருசித்துள்ளனர்.

- Advertisement 2-

ரோஹித் ஷர்மாவின் சதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வந்தாலும் அதனை விட தோனியின் சிக்ஸர்கள் பற்றிய பேச்சு தான் பரவலாக இருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த சிக்சர்களை அடித்து விட்டு தோனி கிளம்பி சென்ற சமயத்தில் செய்த ஒரு சம்பவம் தான் தற்போது ரசிகர்களை மிகவும் நெகிழ வைத்துள்ளது.

பெவிலியன் நோக்கி நடந்து கொண்டிருந்த தோனி, அங்கே ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு மும்பை ஜெர்சி அணிந்த குட்டி ரசிகை நின்றிருந்ததை கவனித்ததுடன், அங்கே கிடந்த பந்து ஒன்றை உடனடியாக எடுத்து தோனி அந்த ரசிகையின் கையில் கொடுத்து விட்டு அப்படியே வேகமாக நடந்து சென்றார். இதனைப் பார்த்த பலரும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்த தோனி அப்படியே ஒரு குழந்தையாக மாறிய தருணத்தை நினைத்து கொண்டாடியும் வருகின்றனர்.

சற்று முன்