ஐ.பி.எல் கிரிக்கெட் வராலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியானது இதுவரை நடைபெற்று முடிந்துள்ள சீசன்களில் 9 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசதியுள்ளது. அதோடு தற்போது நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்த சி.எஸ்.கே அணியானது முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 10-ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தல தோனி அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியானது பிளே ஆப் சுற்றிற்கு முன்னேறியபோது பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தோனியை பேட்டி கண்டார்.
அப்போது அவர், எல்லாம் வருடமும் சி.எஸ்.கே மட்டும் எப்படி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுகிறது. இதில் இருக்கும் ரகசியம் என்ன என்று தோனியிடம் கேட்டார். அதற்க்கு பதிலளித்த தோனி, அதெல்லாம் ட்ரேட் சீக்ரெட், அதை நான் வெளிப்படையாக கூறிவிட்டால் பிறகு யாரும் என்னை ஏலத்தில் எடுக்க மாட்டார்கள் என்று கூறினார்.
தோனியின் இந்த சாமர்த்தியமான பதில் பலரையில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதே போல அவரின் இந்த பேச்சை அவரது ரசிகர்கள் பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
எதிர்வரும் மே 28 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் 5 ஆவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி வரலாற்றில் அதிகமுறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை அவர்கள் சமன் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: சின்னத்தல ரெய்னா சென்னைக்கு மட்டும் இல்ல, எனக்கும் தான் ஸ்பெஷல். இப்போ கூட எனக்கு அவர் இதெல்லாம் பன்றாரு – சூப்பர் தகவலை பகிர்ந்த மும்பை வீரர் திலக் வர்மா
எனினும் சென்னை அணி, எந்த அணியை பைனலில் எதிர்கொள்ளும் என்பது இன்றைய போட்டியின் முடிவில் தான் தெரியும். யாராக இருந்தாலும் சென்னை அணியில் தோனி இருக்கும்போது வெற்றி சென்னைக்கு தான் என்று சி.எஸ்.கே ரசிகர்கள் கூறிவருகின்றனர்.