- Advertisement -
Homeவிளையாட்டுதல தல தான்யா.. டி 20 கிரிக்கெட்டில் தோனி பதித்த தனி முத்திரை.. எட்டிக் கூட...

தல தல தான்யா.. டி 20 கிரிக்கெட்டில் தோனி பதித்த தனி முத்திரை.. எட்டிக் கூட பிடிக்க முடியாத உயரம்..

- Advertisement-

2008 ஆம் ஆண்டு முதல் கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் மிகவும் வெற்றிகரமாக இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம், ஏராளமான இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக இருந்து வரும் சூழலில், சீனியர் வீரர்களும் இதன் மூலம் தங்கள் கம்பேக்கை சர்வதேச போட்டிகளில் கொடுத்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்த போது இதில் ஆடிய வீரர்கள் சிலர் தற்போது வரை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகின்றனர். அந்த வகையில், முக்கியமான ஒரு வீரர் தான் சிஎஸ்கே அணியில் ஆடி வரும் எம். எஸ். தோனி. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி 20 உலக கோப்பையில் இந்திய அணியை தலைமை தாங்கும் வாய்ப்பை பெற்று கோப்பையையும் கைப்பற்றி இருந்த தோனி, அதன் அடுத்த ஆண்டிலேயே சிஎஸ்கே அணிக்கு தேர்வாகி அதன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கேவின் கேப்டனாக செயல்பாட்டு வந்தார். தொடர்ந்து, தற்போது அவருக்கு 42 வயதாகும் நிலையில், அந்த அணியின் தலைமையை இளம் வீரர் ருத்துராஜ் கையில் ஒப்படைத்து பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக தான் செயல்பட்டு வருகிறார் தோனி. அவரது தலைமையில் சிஎஸ்கே அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளதுடன் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும் இந்த தொடரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

கேப்டன்சி மாறினாலும் சிஎஸ்கே அணி அதே ஃபார்மில் தான் இருந்து வருகிறது. தோனியின் பெரிய ப்ளஸ்ஸே எப்படிப்பட்ட வீரர் சிஎஸ்கே அணியில் இணைந்தாலும் அவரை முழுமையாக தேற்றி ஃபார்முக்கு வர வைத்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க வைப்பது தான். தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே என பல வீரர்கள் சிஎஸ்கே அணியில் வந்த பின்னர், புது பரிமாணத்தில் ஆடி வருகின்றனர்.

- Advertisement-

சிஎஸ்கே அணியும் ஒரு குடும்பம் போல இருந்து வருவதால் அதற்கு முக்கிய காரணமாக தோனி ஒரு வேளை விலகினால், நிச்சயம் அந்த அணி வீரர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றே தெரிகிறது. இதனிடையே, நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

அப்படி ஒரு நிலையில், 3 வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே ஆடியிருந்த போது டெல்லி அணிக்கு எதிராக ப்ரித்வி ஷா கேட்சை தோனி எடுத்திருந்தார். அப்போது மிக முக்கியமான ஒரு சாதனையை டி 20 கிரிக்கெட்டில் படைத்து முத்திரை பதித்துள்ளார். விக்கெட் கீப்பராக ஸ்டம்பிங், கேட்ச் என அனைத்தையும் சேர்த்து மொத்தம் 300 விக்கெட்டுகளுக்கு காரணமாக டி 20 போட்டிகளில் இருந்துள்ளார் தோனி.

வேறு எந்த விக்கெட் கீப்பரும் 280 விக்கெட்டுகளை கூட தாண்டாத நிலையில், தோனி 300 என்ற அரிய இடத்தை தொட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், 274 விக்கெட்டுகளில் பங்களிப்பை அளித்து இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்