- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி இல்லனா நானும் போறேன்.. பிசிசிஐ கொடுத்த நெருக்கடி.. கேப்டன் பதவியையே ராஜினாமா செய்ய துணிந்த...

கோலி இல்லனா நானும் போறேன்.. பிசிசிஐ கொடுத்த நெருக்கடி.. கேப்டன் பதவியையே ராஜினாமா செய்ய துணிந்த தோனி..

- Advertisement 1-

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் விராட் கோலி ஆட வேண்டும் என்பதற்காக தோனி அடுத்த துணிச்சலான முடிவு குறித்த தகவலை தற்போது பார்க்கலாம். இந்திய அணியில் இன்று ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி தொடர்ந்து ஆடுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் தான் முன்னாள் கேப்டன் தோனி.

இந்திய அணி ஒரு காலத்தில் சிறந்து விளங்கி 3 ஐசிசி கோப்பைகளை 6 ஆண்டு கால இடைவெளியில் கைப்பற்றிய போது கேப்டனாக இருந்தவர் தோனி. இந்த 3 தொடரிலும் அனைத்து இந்திய அணி வீரர்களும் சிறப்பாக ஆடியது கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் தோனி வழிநடத்திய விதமும் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

2007 மற்றும் 2013 ஆண்டில் நடந்த முறையே டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றின் இறுதி போட்டியில் கடைசி கட்டத்தில் பந்து வீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தி கடினமான வெற்றியை தொட்டு முத்திரை பதித்திருந்தார் தோனி. அது மட்டுமில்லாமல், தொடர்ந்து ஃபார்மில் இல்லாத வீரர்களை சுற்றி விமர்சனங்கள் உருவானாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல், அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி முன்னணி வீரர்களாகவும் நிறைய பேரை மாற்றி உள்ளார்.

கோலி, ரோஹித் உள்ளிட்டோர் ஃபார்மில் இல்லாத சமயத்தில் இளம் வீரர்களாக இருக்கும் அவர்களை மாற்ற வேண்டும் என்றும் நெருக்கடி உருவானது. ஆனால், அவர்களை தொடர்ந்து தேற்றி வாய்ப்பு கொடுக்க, இன்று சர்வதேச உலகின் நட்சத்திர வீரர்களாகவும் அவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement 2-

இதனிடையே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான உமர் அக்மல், கோலிக்காக தோனி கிரிக்கெட்டில் ஒருந்து ஒதுங்க முடிவு செய்தது பற்றி பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது நடந்த தொடரில் விராட் கோலி ஃபார்மில் இல்லை என கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் நடந்த சம்பவத்தை பற்றி நினைவு கூர்ந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் உமர் அக்மல், “நான், தோனி, ரெய்னா, யுவராஜ் சிங் மற்றும் சோயப் மாலிக் ஆகியோர் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தோம். நாங்களும் தொடரை வெல்ல, விராட் கோலி நன்றாக ஆடாததால் அவரை சுற்றி அதிக நெருக்கடி உருவாகி இருந்தது.

அவருக்கு அந்த தொடர் சிறந்த தொடராக முடியவில்லை. இதனால் கடைசி ஒரு நாள் போட்டியில் கோலியை இடம்பெற செய்ய கூடாது என தோனியிடம் அணியின் மேனேஜர் தெரிவித்திருந்தார். இதனை கேட்டதும் உடனடியாக சரி என்று தெரிவித்த தோனி, ‘நானும் எனது வீட்டில் ஆறு மாதங்களாக இருக்கவில்லை. ரெய்னா அணியை வழிநடத்துவார். எனக்கும் கோலிக்கும் சேர்த்து ஊருக்கு செல்ல டிக்கெட் புக் செய்யுங்கள்’ என கூறிவிட்டார்.

இதைக் கேட்டதும் அந்த மேனேஜர் ஒரு நிமிடம் குழம்பி போக, கோலி இருக்கட்டும் என கூறிவிட்டு சென்றுவிட்டார். தோனி அப்படி கூறியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது பற்றி தோனி பேசிய போது விராட் கோலி ஒரு சிறந்த வீரர் என்றும் ஒன்றிரன்டு போட்டிகளில் நன்றாக ஆடவில்லை என்பதற்காக அவர் அணியில் இருக்கக் கூடாது என்பது கட்டாயம் கிடையாது என்றும் கூறினார்.

அதேபோல வருங்காலத்தில் நிச்சயம் இந்திய அணியின் கேப்டனாக மாறப் போகிறவர் என்றும் தோனி அப்போதே கூறி இருந்தார்” என உமர் அக்மல் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்