- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியா தோக்க காரணமே தோனி தான்.. இந்திய ரசிகர்களுக்கு இடியாய் இறங்கிய விஷயம்..

இந்தியா தோக்க காரணமே தோனி தான்.. இந்திய ரசிகர்களுக்கு இடியாய் இறங்கிய விஷயம்..

- Advertisement 1-

பொதுவாக இந்தியா உள்ளிட்ட ஆசிய மண்ணில், வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் ஆடும் போது அவர்கள் நிச்சயம் ரன் சேர்க்கவும், பந்து வீசவும் சிரமப்படுவார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்களில் வேகப்பந்து வீச்சிற்கு தான் அதிகம் சாதகமாக இருக்கும். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற இடங்களில் வேகப்பந்து வீச்சுடன் சுழற்பந்து வீச்சும் அதிக அச்சுறுத்தல் நிறைந்திருக்கும் வகையில் பிட்ச்கள் தயார் செய்யப்பட்டிருக்கும்.

இதனால், இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் ஆட வரும் வெளிநாட்டு அணிகள், தங்கள் போட்டியை டிரா செய்தாலே போதும் என்று தான் நினைப்பார்கள். ஆனால், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வரும் இங்கிலாந்து அணி, வெற்றி மட்டும் தான் எங்களின் இலக்கு என்பது போல ஆடி வருகின்றனர்.

முதல் டெஸ்டின் முதல் சில நாட்கள் சற்று தடுமாற்றங்களை அவர்கள் கண்டிருந்தாலும் பிட்ச்சை பற்றி நன்கு தெரிந்து கொண்டு சிறப்பாக திட்டம் போட்டு இந்திய அணியை வீழ்த்தி இருந்தனர். இந்தியா தான் இந்த தொடரை வெல்லும் என பலரும் தெரிவித்த நிலையில், வெற்றியுடன் இங்கிலாந்து அணி தொடரை தொடங்கி இருப்பது நிச்சயம் ரோஹித் மற்றும் இந்திய வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று தான் தெரிகிறது.

இங்கிலாந்து அணியின் வெற்றி பயணத்திற்கு பலரும் அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோரை பாராட்டி வருகின்றனர். ஆசிய மண்ணில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி ஆடிய நான்கு போட்டிகளிலும் அவர்களே தான் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கான சிறந்த டெஸ்ட் கேப்டன் வரிசையில் மிக முக்கியமான இடத்தை ஸ்டோக்ஸ் பிடிப்பார் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement 2-

இந்த நிலையில், சமீபத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் குறித்து சில கருத்துக்களை பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸில் இடம் பிடித்திருந்தார். அதிக போட்டிகளில் அவர் களமிறங்கவில்லை என்ற போதிலும் தோனியின் கேப்டன்சி அனுபவம் பெற வாய்ப்பு கிடைத்திருந்தது.

இது பற்றி பேசிய பென் ஸ்டோக்ஸ், “தோனி மற்றும் ஸ்டீபன் பிளெம்மங் ஆகியோரிடையேயான புரிதல் அபாரமானது. அவர்கள் இருவரும் இணைந்து வேகமாக எடுக்கும் முடிவுகள் அந்த அணிக்கு சிறந்தது என்பதை பொறுத்து தான் அமையும். அதனைத் தான் நானும் மெக்கலமும் பின்பற்றி வருகிறோம். தோனி மற்றும் பிளம்மிங்குடன் நான் பணிபுரிந்துள்ளேன். சிஎஸ்கே போன்ற அற்புதமான அணியில் ஒரு அங்கம் வகித்தது அசத்தலாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்