- Advertisement -
Homeவிளையாட்டுதோனியை தடை செய்திருக்க வேண்டும். அவர் இந்த ஐபிஎல் போட்டியில் செய்தது பெரும் தவறு. வைரலாகும்...

தோனியை தடை செய்திருக்க வேண்டும். அவர் இந்த ஐபிஎல் போட்டியில் செய்தது பெரும் தவறு. வைரலாகும் சேவாக்கின் பழைய கருத்து

- Advertisement-

கேப்டன்களை பொறுத்தவரை தோனி எப்போதும் ஒரு மிக சிறந்த கேப்டனாக பார்க்கப்படுகிறார். அவர் களத்தில் இருக்கும்போது பெரிதாக கோவப்டுவது கிடையாது. அதனாலேயே அவரை கேப்டன் கூல் என்று அனைவரும் அழைப்பதுண்டு. வீரர்கள் களத்தில் தவறு செய்தாலும் அதை இவர் பொறுமையாகவே கையாளுவார்.

அதே சமயம் வீரர்கள் டென்ஷன் ஆனாலும் இவர் அவர்களை சாந்தப்படுத்துவார். இப்படி பொறுமைக்கு பெயர் போனவர் கேப்டன் தோனி. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ஐ.பி.எல்-இல் இவர் ஒருமுறை கோவத்தோடு களத்திற்குள் வந்தது பெரும் விவாதமாக மாறியது. 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை அணிக்கு இடையே நடந்த போட்டி அது.

அந்த வருடத்தின் 25வது போட்டி அது. அதில் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அந்த போட்டியின் கடைசி ஓவரை அப்போது ராஜஸ்தான் அணியில் இருந்த பென் ஸ்டோக்ஸ் வீசினார். 6 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது வீசப்பட்ட பந்து ஒன்றை அம்பையர் நோ பால் என அறிவித்தார். ஆனால் உடனடியாக அது நோ பால் இல்லை என்று மற்றொரு அம்பையரால் அறிவிக்கப்பட்டது.

இதனால் போட்டியின் நடுவே திடீரென்று களத்திற்குள் வந்துவிட்டார் தோனி. இது அப்போது பெரும் சர்ச்சையாக மாறியது. தோனியின் இந்த செயலால் அவருக்கு அப்போது போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அது குறித்து அப்போது பேசிய சேவாக், தோனியின் செயலை கடுமையாக கண்டித்தார்.

- Advertisement-

அவர் பேசுகையில், தோனியை சில போட்டிகள் தடை செய்திருக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அப்போது தான் மற்ற கேப்டன்களுக்கு அது முன்னுதாரணமாக இருந்திருக்கும். அவருக்கு நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்திருந்தால் அவர் வாக்கி டாக்கி மூலம் நான்காவது நடுவரை தொடர்புகொண்டிருக்க வேண்டும்.

களத்தில் ஏற்கனவே இரண்டு சிஎஸ்கே வீர்கள் இருக்கும்போது அவர் களத்திற்கு வந்திருக்க கூடாது. தோனி இந்திய அணியை வழிநடத்திய போது இப்படி வெகுண்டெழுந்து நான் பார்த்ததில்லை. ஆனால் சிஎஸ்கே ஜெர்சியை அணியும் போதெல்லாம் அவரின் ஆர்வம் அதிகரித்து விடுகிறது. அவர் இந்திய அணிக்காக இது போன்று செய்திருந்தால் உண்மையில் நான் சந்தோசப்பட்டிருப்பேன் என்று கூறி இருந்தார் சேவாக். இப்படி சேவாக் அப்போது தோனி குறித்து கூறிய தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்