- Advertisement -
Homeவிளையாட்டுஇப்போ எனக்கு பிடிச்ச பவுலர் இவரு தான்.. இந்திய வீரரை கைகாட்டிய தோனி.. வைரலாகும் தகவல்..

இப்போ எனக்கு பிடிச்ச பவுலர் இவரு தான்.. இந்திய வீரரை கைகாட்டிய தோனி.. வைரலாகும் தகவல்..

- Advertisement-

பொதுவாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஒரு வீரர் ஓய்வினை பெற்று விட்டால் அதன் பின்னர் அவரைப் பற்றிய கருத்துக்கள் எப்போதும் பெரிய அளவில் பரவலாக பேசப்படாது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்து ஐந்து ஆண்டுகளான போதிலும் இன்னும் தோனி மீதான கிரேஸ் கொஞ்சம் கூட ரசிகர்கள் மத்தியில் குறைந்தபாடில்லை.

கடந்த ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக இருந்து சிறப்பாக வழி நடத்தி வந்த தோனி, ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வெல்லவும் உதவி இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜையும் தோனி நியமித்திருந்தார்.

அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே ஓய்வினை அறிவித்து விடுவார் என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து போகவும் தொடங்கினர். ஆனால் லீக் சுற்றின் கடைசி போட்டி வரை ஆடியிருந்த தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவாரா, மாட்டாரா என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இது பற்றி சமீபத்தில் பேசி இருந்த பலரும் கூட, அவர் நிச்சயமாக அடுத்த இரண்டு சீசன்களில் ஆடுவார் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் தான் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் வீரர்களைத் தக்க வைத்துக் கொள்வது குறித்த சில விவரங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement-

ஐபிஎல் தொடரில் அடுத்த ஏலத்திற்கு முன்பாக நான்கு வீரர்களை தான் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது. அத்துடன் சிஎஸ்கே அணியில் தோனி இடம்பெற மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி வைரலானது. ஒருவேளை ஐந்து வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி கொடுத்தால் மட்டும்தான் தோனிக்கு சிஎஸ்கே அணியில் இடம் கிடைக்கும் என்றும் இல்லையென்றால் அவர் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் ஒரு கருத்தும் எழுந்துள்ளது.

இந்த விஷயம் தோனி ரசிகர்களை சோழத்தில் ஆழ்த்தி இருந்த நிலையில் அவர் எப்படியாவது தொடர்ந்து ஆட வேண்டும் என்றும் விரும்பி வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசிய கருத்து தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்த தோனியிடம் ரசிகர் ஒருவர், தற்போது இருக்கும் வீரர்களில் பிடித்தமான வேகப்பந்து வீச்சாளர் யார் என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த தோனி, பும்ராவின் பெயரை குறிப்பிட்டு சில கருத்துக்களை பேசி இருந்தார். அவர் கூறியது போலவே, சமீபத்தில் இந்திய அணி உலக கோப்பை உள்ளிட்ட பல முக்கியமான தொடர்களை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி இருந்தார் பும்ரா.

சற்று முன்