- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வினுக்கு இப்படி ஒரு திறமையா.. தோனியே வியந்து பார்த்து சிஎஸ்கே அணியில் கொடுத்த ப்ரமோஷன்..

அஸ்வினுக்கு இப்படி ஒரு திறமையா.. தோனியே வியந்து பார்த்து சிஎஸ்கே அணியில் கொடுத்த ப்ரமோஷன்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினின் 100 வது டெஸ்ட்டை எதிர்நோக்கி தான் காத்திருந்து வருகின்றனர். 500 க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளதுடன் மட்டுமல்லாமல் பல போட்டிகளில் தோல்வி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பி வெற்றி கண்டவர்களில் முக்கியமானவரும் அஸ்வின் தான்.

முன்னதாக இவர் பெரிய பேட்ஸ்மேனாக வேண்டும் என்ற ஆசையில் தான் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல பந்து வீச்சாளராகவும் உருவெடுத்து இருந்தார் அஸ்வின். அப்படி ஒரு சூழலில் தான் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே மிகச் சிறப்பான பங்களிப்பையும் இந்திய அணிக்காக அளித்து வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அது மட்டுமில்லாமல், தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்த சமயத்திலேயே தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அஸ்வின் வென்றிருந்தார். பேட்டிங் மட்டுமில்லாமல், அதே போட்டியில் அஸ்வின் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஸ்வினின் பேட்டிங்கை பார்த்து சிஎஸ்கே அணியில் தோனி கொடுத்த ப்ரமோஷன் தொடர்பான தகவலை தற்போது அஸ்வினே தெரிவித்துள்ளார்.

முன்னதாக அஸ்வின் சிஎஸ்கே அணியில் இருந்த போது அவரது பேட்டிங் திறனை பற்றி தெரியாமல் தோனி இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் தான் 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டெஸ்டில் முதல் சதம் அடித்த பின்னர் அஸ்வினுக்கு பேட்டிங் சிறப்பாக வரும் என அறிந்து ஆச்சரியப்பட்டு போய் உள்ளார் தோனி.

- Advertisement 2-

இது பற்றி தற்போது பேசி உள்ள அஸ்வின், “எனக்கு பேட்டிங் தெரியும் என்பது பற்றி அந்த சமயத்தில் தோனிக்கு தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது. ஐபிஎல் தொடரில் நான் ஆடி வந்த போது எனக்கு பெரிதாக பேட்டிங் கிடைக்காது என்பதன் காரணமாக, தோனியால் தெரிந்து வைத்திருக்க முடியாமல் போனது.

அப்போது தான் டெஸ்டில் எனது முதல் சதத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு அடித்திருந்தேன். அதைப் பார்த்தவுடனே உனக்கு பேட்டிங் இந்த அளவுக்கு சிறப்பாக வரும் என்பது எனக்கு தெரியவில்லை என தோனி என்னிடம் கூறினார். அதன் பின்னர் சிஎஸ்கே அணிக்காக இரண்டு முறை தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பை எனக்கு தோனி தந்தார். அது மட்டுமல்லாமல் அதன் பின்னர் எனக்கு பேட்டிங் வரிசையிலும் சிஎஸ்கே அணியில் தோனி எனக்கு ப்ரோமோஷன் கொடுத்திருந்தார்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்காக பல சீசன்கள் ஆடி வந்த அஸ்வின், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்