- Advertisement -
Homeவிளையாட்டுCSK : பின்வரிசையில் களமிறங்குவது ஏன்? போட்டி முடிந்து முரளி கார்த்திக் கேட்ட கேள்விக்கு பதிலளித்த...

CSK : பின்வரிசையில் களமிறங்குவது ஏன்? போட்டி முடிந்து முரளி கார்த்திக் கேட்ட கேள்விக்கு பதிலளித்த – தல தோனி

- Advertisement-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. அதோடு புள்ளி பட்டியல் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட அந்த இரண்டாவது இடத்தை தக்க வைக்கும் என்பதனால் நேற்றைய போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 140 ரன்கள் மட்டுமே குவிக்க 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பின்வரிசையில் களமிறங்கி விளையாடிய மகேந்திர சிங் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 பந்துகளில் இரண்டு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து அசத்தினார். அவரது இந்த அசத்தலான அதிரடி காரணமாகவே சென்னை அணி நல்ல ஸ்கோரை எட்டியது.

சென்னை அணிக்காக தோனி இந்த சீசனில் 47 பந்துகளை சந்தித்து 96 ரன்களை குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த 96 ரன்களில் 72 ரன்கள் பவுண்டரிகள் மூலமாகவே வந்தவை. அதிலும் 10 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளை தோனி விளாசியுள்ளார். இப்படி அட்டகாசமான ஹிட்டிங் பார்மில் இருக்கும் அவர் முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து தோனியை பேட்டி கண்ட முரளி கார்த்திக்கும் நீங்கள் ஏன் பேட்டிங் ஆர்டரில் பின்வரிசையில் களமிறங்குகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த தோனி கூறுகையில் :

- Advertisement-

இதுதான் என்னுடைய வேலை இதை நான் எங்களது அணி வீரர்களிடமும் சொல்லிவிட்டேன். என்னுடைய வேலையே பின் வரிசையில் களமிறங்கி விளாசுவதுதான். என்னை அதிகமாக ஓட வைக்க வேண்டாம் என்றும் வீரர்களிடம் கூறிவிட்டேன் என்று தனது பதிலினை அளித்து இருந்தார். மேலும் தொடர்ந்து பேசிய தோனி கூறுகையில் : நான் பயிற்சி செய்வதே பின் வரிசையில் களமிறங்கி பலமாக அடிப்பதற்காகத்தான். அதற்காகவே பின்வரிசையில் களமிறங்கி பந்தினை விளாசி வருகிறேன் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்