- Advertisement -
Homeவிளையாட்டுகேப்டனா இல்லனா என்ன.. முதல் மேட்ச்லயே தனித்துவமான சாதனையை எட்டிப் பிடித்த தோனி..

கேப்டனா இல்லனா என்ன.. முதல் மேட்ச்லயே தனித்துவமான சாதனையை எட்டிப் பிடித்த தோனி..

- Advertisement-

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், தோனி விலகி ஐபிஎல் ஆர்மபிக்க ஒரு நாள் இருக்கும் போது அந்த அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருந்தது, ரசிகர்களை அதிகம் வேதனையில் தான் ஆழ்த்தி இருந்தது. 2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கு முன்பாக கூட ஜடேஜாவை திடீரென கேப்டனாக தோனி அறிவித்திருந்தார்.

ஆனால் அந்த சீசனில் ஜடேஜாவின் செயல்பாடு சரியாக போகாத பட்சத்தில் தொடரின் பாதியிலேயே மீண்டும் கேப்டனாக மாறி செயல்பட தொடங்கினார் தோனி. அப்படி இருக்கையில், தோனியுடைய வயதின் காரணமாக இந்த சீசன் அவருக்கு கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்பதால் அடுத்த சீசனில் யார் சிஎஸ்கேவை தலைமை தாங்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்திருந்தது.

ரஹானே, ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் சிஎஸ்கேவில் இடம்பிடித்து வருவதால் அவர்களில் ஒருவர் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் கருதப்பட்டது. ஆனால், வருங்கால தலைமுறையை கருத்தில் கொண்டு இளம் வீரர் கெய்க்வாடை புதிய கேப்டனாகவும் தோனி அறிவித்திருந்தது ஒரு புறம் ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்று தான் வருகிறது.

அது மட்டுமில்லாமல், 17 வது ஐபிஎல் சீசனின் ஆரம்பமே அமர்க்களமாக அமைந்துள்ளதும் ரசிகர்களை அதிகம் உற்சாகப்படுத்தி உள்ளது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறார்கள் என்றதும் கோலி, தோனி உள்ளிட்ட பல ஜாம்பவான்களை ஒன்றாக பார்ப்பதற்கான வாய்ப்பு ரசிகர்களுக்கு அமைந்திருந்தது. அதன்படி கோலி பேட்டிங் செய்ய வந்த போது தோனியுடன் அவர் சேர்ந்து நின்ற புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

- Advertisement-

இப்படி பல சிறப்பான விஷயங்கள் இந்த போட்டியில் நடந்ததால் ஐபிஎல் ஆரம்பம் போல இது கடைசி வரை தொடரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், 2008 ஆம் ஆண்டில் கடைசியாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி இருந்த ஆர்சிபி, இந்த முறையும் தோல்வியை தழுவி உள்ளது. அது மட்டுமில்லாமல் புதிதாக சிஎஸ்கே அணியில் இணைந்த முஸ்தாபிசுர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் சிறப்பான பங்களிப்பையும் சிஎஸ்கே அணிக்காக அளித்துள்ளது நிச்சயம் அவர்கள் பலம் வாய்ந்த அணியாக திகழ்வதற்கான வாய்ப்பாகவும் தெரிகிறது.

ஒருபுறம் தோனி கேப்டன்சி பதிவியிலிருந்து விலகியது ரசிகர்களை சற்று ஏமாற்றம் அடைய வைத்திருந்தாலும் இன்னும் சில விஷயங்கள் இந்த போட்டியில் நடந்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கீப்பிங்கில் மாஸ் காட்டும் தோனி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கேட்சுகளை பிடித்ததுடன் மட்டுமில்லாமல் கடைசியில் அனுஜ் ராவத்தை சூப்பராக ரன் அவுட் செய்திருந்தார்.

கேப்டனாக இல்லை என்றாலும் கீப்பிங்கில் 42 வயதிலும் தோனி பட்டையை கிளப்பி வருவதால் ரசிகர்களும் அதை வியந்து பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தான் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக அவுட் எடுத்தது, அதிக ஸ்டம்பிங் செய்தது, அதிக ரன்அவுட் செய்தது, அதிக கேட்ச்கள் பிடித்தது எந்த விக்கெட் கீப்பரும் ஐபிஎல் வரலாற்றில் எட்டாத சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார் தோனி.

சற்று முன்