- Advertisement -
Homeவிளையாட்டு"நீங்க தான் இந்த தடவ ஜெயிக்கணும்".. மேட்ச் முடிஞ்சதும் கோலியிடம் தோனி சொன்ன வார்த்தை.. மகிழ்ச்சியில்...

“நீங்க தான் இந்த தடவ ஜெயிக்கணும்”.. மேட்ச் முடிஞ்சதும் கோலியிடம் தோனி சொன்ன வார்த்தை.. மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள்..

- Advertisement-

ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதிய போட்டி முடிந்து இரண்டு, மூன்று நாட்கள் ஆனபோதிலும் அதனை சுற்றி வரும் விமர்சன விஷயங்களுக்கு இன்னும் முடிவுக்கு வரவே இல்லை. சிஎஸ்கே பத்து ரன்கள் வித்தியாசத்தில் பிளே ஆப்பை கோட்டை விட்டிருந்ததால் அவர்களுக்கு பதில் ஆர்சிபி அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.

யாரும் எதிர்பாராத ஒரு கம்பேக்கை தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்திருந்த ஆர்சிபி அணி, நிச்சயம் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் அதே வேளையில் போட்டி முடிந்த பின்னர் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பெங்களூரை சுற்றி இருந்த சிஎஸ்கே ரசிகர்களை அவமதித்த விஷயங்களும் பெரிய அளவில் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஜெயிக்க வேண்டும் என நினைத்த பலரும் கூட இந்த முறை இப்படிப்பட்ட செயல்பாட்டினால் நிச்சயம் அவர்கள் வெல்லக் கூடாது என்றும் தங்களின் கோபத்தை கருத்துக்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்கள் செய்த விஷயம் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் போட்டி முடிந்த பின்னர் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகுலுக்காமல் சென்றது அதிக விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

சிஎஸ்கே தோற்றதால் தான் கோபத்தில் தோனி அப்படி செய்தார் என்று ஒரு பக்கமும், அவரது கால்வலியின் காரணமாக நீண்ட நேரம் மைதானத்தில் நிற்க முடியாததால் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு அவர் சென்று விட்டதாகவும் ஆதரவான கருத்துக்களும் வெளியாகி இருந்தது. மேலும் கோலியை கூட அவர் பெரிதாக மதிக்கவில்லை என்ற கருத்துக்களும் பரவி இருந்த நிலையில் தான் தற்போது வெளியாகி உள்ள தகவல், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஆர்சிபி ரசிகர்களுக்கும் நிம்மதியான விஷயமாக அமைந்துள்ளது.

- Advertisement-

இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவலின் படி, இந்த போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோர் டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமில்லாமல் விராட்டிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த தோனி, “நீங்கள் நிச்சயமாக ஃபைனலுக்கு முன்னேற வேண்டும். அத்துடன் மட்டும் இல்லாமல் அதில் வெற்றி பெற வேண்டும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றும் தோனி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆர்சிபி வென்றது பிடிக்காமல் தோனி வெளியேறியதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர்கள் வெற்றி பெற வேண்டும் என தோனி பாராட்டு தெரிவித்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

சற்று முன்