- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த தங்கத்த அணியில சேருங்கப்பா.. கோப்பை ஜெயிக்க அவர் நமக்கு தேவை.. முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்...

அந்த தங்கத்த அணியில சேருங்கப்பா.. கோப்பை ஜெயிக்க அவர் நமக்கு தேவை.. முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் அதிரடி பேச்சு

- Advertisement 1-

ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடந்த முறை இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் அரை இறுதி கூட செல்லாமல் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இம்முறை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பிளேயிங் லெவன் குறித்து இன்னும் ஒரு முடிவை தேர்வு குழுவினர் உருவாக்கவில்லை.

தற்போது இந்திய அணியில் யாரை சேர்க்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் எம்எஸ்கே பிரசாத் தற்போது பேட்டி அளித்திருக்கிறார். அதில் அஸ்வின் இன்னும் சிறப்பாக தான் விளையாடுகிறார். அவர் ஆசிய கிரிக்கெட் சூழலில் சரியான நபராக இருப்பார்.

ஒரு அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் நிச்சயம் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெற வேண்டும். உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவை நீங்கள் எடுத்துக் கொண்டால், இடது கை பேட்ஸ்மேன்கள் அங்கு அதிகம் இருப்பார்கள்.

- Advertisement 2-

அப்போது அஸ்வினை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு சுலபமாக இருக்கும். தற்போது அவர் மனதளவிலும் சிறப்பான நிலையில் இருக்கிறார். பேட்டிங்கும் அவர் சிறப்பாக விளையாடக் கூடியவராக இருப்பார். இதனால் இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் விளையாடும் போது அஸ்வின் உங்களுக்கு தவிர்க்க முடியாத வீரராக இருப்பார். இந்திய அணி கோப்பையை வெல்ல அவர் நிச்சயம் வலு சேர்ப்பார் என்று எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.

எம்எஸ்கே பிரசாத்தை தொடர்ந்து, பும்ரா குறித்து பேசிய ரவி சாஸ்திரி, பும்ரா எவ்வளவு பந்துகளை வலை பயிற்சியில் பந்து வீசினாலும், அவர் போட்டியில் விளையாடினால் மட்டுமே அவர் எந்த அளவிற்கு பிட்டாக இருக்கிறார் என்பது தெரியவரும் . எனவே அயர்லாந்து தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

சற்று முன்