- Advertisement -

என்னையா டீம்ல எடுக்கல.. மொத்த வெறியையும் தீர்த்த ராகுல்.. கேள்விக்குறியான மும்பையின் பிளே ஆப்..

கடந்த பல ஐபிஎல் போட்டிகளில் அனைத்து அணிகளுமே ஏறக்குறைய 200 ரன்களுக்கு மேல் அடித்து வந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதி இருந்த போட்டியில் இரண்டு அணிகளுமே குறைவான ரன்களை மிக அதிக பந்துகளை எடுத்து அடித்திருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்திருந்தது.

டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரோஹித் ஷர்மா 4 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா கோல்டன் டக்காகவும் வெளியேறி இருந்தனர். ஒரு கட்டத்தில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை திணற, இஷான் கிஷன் 32 ரன்களும், நேஹல் வதேரா 46 ரன்களும் எடுக்க 100-ஐ தாண்டுமா என்ற சந்தேகத்தில் இருந்து மும்பை அணி ஸ்கோரை 144 ரன்கள் எட்டவும் உதவி இருந்தனர்.

- Advertisement -

இறுதியில் டிம் டேவிட்டின் அதிரடியான 35 ரன்கள் இந்த ஸ்கோருக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணி தரப்பில் மோஷின் கான் இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்டாய்னிஸ், நவீன் உல் ஹக் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, மும்பை அணியை விட நிதானமாக ரன் சேர்த்தது. இலக்கு குறைவாக இருந்த போதிலும் பிட்ச்சின் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை மிக குறைவாக தான் லக்னோ அணியும் ரன் சேர்த்து வந்தது. 15 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுக்க, கடைசி ஐந்து ஓவர்களில் 29 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தது.

- Advertisement -

ஆனால் இதனையும் மிக மிக நிதானமாக சேர்க்க தொடங்கிய லக்னோ அணிக்கு கடைசியில் நெருக்கடியும் அதிகம் உருவானது. 2 ஓவர்களில் 13 ரன்கள் வேண்டுமென்ற சூழலில், கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தது.நிக்கோலஸ் பூரன் களத்தில் இருக்க, 19 வது ஓவரில் ரன் அவுட்டானார் ஆயுஷ் பதோனி.

ஆனாலும் இதே ஓவரில் மொத்தம் 10 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் தேவைப்பட்ட 3 ரன்னை இரண்டே பந்துகளில் எடுத்து லக்னோ அணி தங்களின் 6 வது வெற்றியை பதிவு செய்து 3 வது இடத்திற்கும் முன்னேறி உள்ளது.

இந்த தோல்வியால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள மும்பை அணி, அடுத்த 4 போட்டிகளிலும் வென்றால் தான் பிளே ஆப் சுற்றை நினைத்தாவது பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Recent Posts