- Advertisement -
Homeவிளையாட்டுCSKvsMI: சேப்பாக்கம் எங்க கோட்டைன்னு கெத்து காட்டும் மும்பை இந்தியன்ஸ்… 13 ஆண்டுகளாக தொடரும் சோகம்....

CSKvsMI: சேப்பாக்கம் எங்க கோட்டைன்னு கெத்து காட்டும் மும்பை இந்தியன்ஸ்… 13 ஆண்டுகளாக தொடரும் சோகம். இன்று பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே?

- Advertisement-

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை சி எஸ் கேவும் மும்பையும் இரண்டுமே சூப்பர் ஸ்டார் அணிகள். இரு அணிகளும் சேர்ந்து 9 முறை கோப்பையை வென்றுள்ளன. சென்னை அணியை அதிகமுறை வெற்றி பெற்ற அணி என்ற பெருமையும் மும்பை இந்தியன்ஸ் வசமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 20 முறை சி எஸ் கே அணியை மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது. அதில் இரண்டு முறை பைனலில் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய போட்டி ஹை வோல்டேஜ் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் 49வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன. இந்த பரபரப்பான ஆட்டம் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.

இன்று போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானம். இங்கு நடக்கும் போட்டிகளில் எதிரணிகளை சிஎஸ்கே ஓட ஓட விரட்டி இருக்கிறது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மட்டும் சிஎஸ்கேவின் ஜம்பம் பலிக்கவில்லை. இங்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் சிஎஸ்கேவும் 7 முறை மோதியுள்ளன. அதில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிதான் வென்றுள்ளது. கடைசியாக 2010 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸை சேப்பாக்கத்தில் வீழ்த்தியது.

அதன் பிறகு 13 ஆண்டுகளாக வெவ்வேறு தருணங்களில் நடந்த போட்டிகளில் எல்லாம்  மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெற்றி பெற்றுள்ளது. இந்த 13 ஆண்டு சோகமான சாதனையை இன்று வெற்றி பெற்று சி எஸ் கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஆசை சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தோனி தலைமையிலான மஞ்சள் படை அதை நிறைவேற்றுமா எனப் பொருத்திருந்து பார்ப்போம்.

- Advertisement-

சற்று முன்