இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் தொடரானது நேற்றுடன் லீக் போட்டிகளை நிறைவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குஜராத், சென்னை மற்றும் லக்னோ அணி ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றினை உறுதி செய்திருந்த வேளையில் மீதமிருந்த ஒரு இடத்தை பிடிக்கப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.
இந்நிலையில் இந்த நான்காவது இடத்தை பிடிப்பதற்கான முக்கியமான லீக் போட்டியானது நேற்று பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நிலவியது. அந்த வகையில் இந்த தொடரின் 69-ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அப்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 200 ரன்களை குவித்தது.
பின்னர் இரண்டாவதாக விளையாடிய மும்பை அணியானது 201 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த முக்கியமான 70-ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 197 ரன்களை குவித்தது.
பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 198 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியதால் தற்போது மும்பை அணி 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு அணி பெற்ற இந்த தோல்வியின் மூலம் தற்போது மும்பை அணியானது எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்த உள்ளது.
ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் ஐந்து கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்தி அடுத்ததாக குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடும் அணியையும் வீழ்த்தினால், இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமின்றி ஆறாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: கடைசி லீக் போட்டியில் பெற்ற வெற்றிக்கு பின்னர் ரோஹித் சர்மா பேசியது என்ன? – விவரம் இதோ
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது தற்போது பெங்களூரு அணி பெற்ற தோல்வி தான் என்றால் அது மிகையாகாது. இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்ப கட்டத்தில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் வழக்கம் போல பின்வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியானது இறுதிப்போட்டியில் விளையாட ஒரு வாய்ப்பினை பெற்றுள்ளது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.