- Advertisement -
Homeவிளையாட்டுமும்பை 3 மேட்ச் தோத்தது இதுனால தான்.. அடுத்த மேட்ச் ஜெயிக்கணும்னா.. யாரும் சொல்லாத விஷயத்தை...

மும்பை 3 மேட்ச் தோத்தது இதுனால தான்.. அடுத்த மேட்ச் ஜெயிக்கணும்னா.. யாரும் சொல்லாத விஷயத்தை பட்டியல் போட்ட ரசிகர்கள்…

- Advertisement-

ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, இஷான் கிஷான், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் என பல உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் மும்பை அணியில் இடம் பெற்று இருப்பதால் நிச்சயம் இந்த முறை அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு பெறுவார்கள் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அணிக்குள் என்ன பிரச்சனையோ இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் பரிதாபமாக தோல்வி அடைந்து புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர மற்ற ஒன்பது அணிகளும் இந்த தொடரில் ஒரு வெற்றியாவது பதிவு செய்த நிலையில் இப்படி ஒரு பலமான அணியாக இருந்த போதிலும் முதல் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகளில் மும்பை தோல்வி அடைந்திருந்தாலும் அதில் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடந்து முடிந்த போட்டியில் மும்பை அணியின் பேட்டிங் தான் பெரிய தலைவலியாக மாறி இருந்தது. மும்பை அணியில் முதல் மூன்று வீரர்கள் கோல்டன் டக்கில் அவுட் ஆக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை ஆகாஷ் மத்வால் எடுத்தாலும் பின்னர் ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து நிதானமாக ஆடி ராஜஸ்தான் அணி வெற்றி பெறவும் காரணமாக அமைந்திருந்தனர். இதனால், இந்த தொடரின் 3 வது வெற்றியை பெற்று முதலிடத்திற்கு அவர்கள் முன்னேறினர்.

- Advertisement-

இந்த நிலையில் தான் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு ஒரு முக்கியமான காரணத்தை ரசிகர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சில முக்கியமான வெளிநாட்டு வீரர்களை மும்பை அணி எடுத்திருந்தது. அதில் ஒருவர் தான் ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவ வீரர் முகமது நபி. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் இவர் இதுவரை நடந்த மூன்று போட்டியில் ஒரு முறை கூட அவர் களமிறங்கவில்லை.

தென்னாபிரிக்க அணியின் U 19 வீரர் மாபாக்கா, ப்ரேவிஸ் என அனுபவம் குறைந்த இளம் வீரர்களுக்கு மும்பை அணி வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து ஆதரவையும் தெரிவித்து வருகின்றது. ஆனால் முகமது நபியை பயன்படுத்தினால் நிச்சயம் அவர்களால் வெற்றி பெற முடியும் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணியில் இருந்து அவர் வந்தாலும் பலமுறை இந்தியா உள்ளிட்ட பல அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு மும்பை அணியில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மும்பை அணியின் வெற்றி கணக்கை தொடங்க உதவி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்