- Advertisement 3-
Homeவிளையாட்டுமோசமான சாதனையுடன் ஊருக்கு கிளம்பிய மும்பை இந்தியன்ஸ்... யுத்தத்திற்கு தயாராகும் சிஎஸ்கே, ஆர்சிபி..

மோசமான சாதனையுடன் ஊருக்கு கிளம்பிய மும்பை இந்தியன்ஸ்… யுத்தத்திற்கு தயாராகும் சிஎஸ்கே, ஆர்சிபி..

- Advertisement 1-

மழை உள்ளிட்ட பல்வேறு தடைகளை கடந்து தற்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதிய போட்டி முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் ஒரு சில லீக் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், இந்த முறை சில எதிர்பாராத ட்விஸ்ட்களும் புள்ளிப் பட்டியலில் அரங்கேறி இருந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பேட் கம்மின்ஸ் தலைமையில் இந்த சீசனில் காலடி எடுத்து வைக்க, அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவார்களா என்ற கேள்வி தான் அதிகம் இருந்தது. ஆனால், அவர்களின் அதிரடி ஆட்டத்தை பார்த்து அனைவரும் மலைத்து போக, கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகவும் தற்போது மாறி உள்ளது.

அதே வேளையில், இன்னொரு பக்கம் கடந்த 3 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாமல் இருந்து வரும் மும்பை இந்தியன்ஸ், இந்த முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் அதிக பலத்துடன் திரும்ப வந்துள்ளதால் நிச்சயம் அவர்கள் கோப்பையை தட்டித் தூக்கி விடுவார்கள் என்று தான் கருதப்பட்டது. ஆனால், பல முக்கியமான போட்டிகள் அவர்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் போக, பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களின் கடைசி லீக் போட்டியில் லக்னோ அணியை சந்தித்திருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. ஆனாலும், 5 வது வீரராக உள்ளே வந்த நிக்கோலஸ் பூரன், அப்படியே லக்னோவின் ஸ்கோரை தூக்கி நிறுத்தி இருந்தார். 10 ஓவர்களில் 69 ரன்களை மட்டும் எடுத்திருந்த லக்னோ அணி, அடுத்த 10 ஓவர்களில் 145 ரன்கள் சேர்த்து பட்டையை கிளப்பி இருந்தது.

- Advertisement 2-

29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் சேர்த்த பூரன், லக்னோ அணி 200 ரன்களை கடக்கவும் உதவி செய்ததால் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய போது நடுவே மழை குறுக்கிட்டது. இதனால், சிறிது நேரம் போட்டி தடைபட, பின்னர் மீண்டும் அதே இடத்தில் இருந்து போட்டி ஆரம்பமானது.

தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் கடந்த சில போட்டிகளாக ரன் அடிக்காமல் விமர்சனத்தை சந்தித்து வந்த ரோஹித், இந்த முறை பவுண்டரிகளை பறக்க விட்டிருந்தார். தொடர்ந்து 10 ஓவர்களில் மும்பை அணி 92 ரன்கள் எடுக்க, 60 பந்துகளில் 123 ரன்கள் வேண்டுமென்ற நிலை இருந்தது.

இதற்கிடையே, ரோஹித், ஹர்திக் பாண்டியா, நேஹல் வதேரா உள்ளிட்டோர் சிறிய இடைவெளியில் அவுட்டாக, மும்பை அணியின் வெற்றி வாய்ப்பும் குறைந்து கொண்டே போனது. 18 பந்துகளில் 66 ரன்கள் வேண்டுமென்ற நிலையில், மும்பை அணியால் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, மும்பை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருந்த நிலையில், அடுத்த இரண்டே சீசன்களில் மீண்டும் ஒரு முறை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி இடத்தை அவர்கள் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்