- Advertisement 3-
Homeவிளையாட்டு1 விக்கட்டுக்கு 4 கோடி கொடுத்தா இப்படி தான் ஆகும். இனிமேலாவது இதையெல்லாம் கொஞ்சம் யோசிங்க...

1 விக்கட்டுக்கு 4 கோடி கொடுத்தா இப்படி தான் ஆகும். இனிமேலாவது இதையெல்லாம் கொஞ்சம் யோசிங்க என ட்ரோல் செய்யும் ரசிகர்கள்.

- Advertisement 1-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகளில் ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியும் தகுதி பெற்றிருந்தது. ஆனால் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் இந்த போட்டியுடன் மும்பை அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

லீக் சுற்று போட்டிகளில் எப்படியோ அடித்து பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணியானது எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை எளிதாக வீழ்த்தியிருந்தாலும், இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

இப்படி மும்பை அணி பெற்ற இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக மும்பை அணியின் மோசமான பந்துவீச்சே பார்க்கப்படுகிறது. ஏனெனில் மும்பை அணியில் பும்ரா, ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால் அனுபவமற்ற பவுலர்கள் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தோல்விக்கு காரணமாக மாறினர்.

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ஏனெனில் கடந்த ஆண்டு காயம் காரணமாக ஒருபோட்டியில் கூட விளையாடாத அவர் இந்த ஆண்டு வெறும் 5 போட்டிகளில் மட்டும் பங்கேற்று 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அதோடு ஒவ்வொரு போட்டியிலுமே அதிகளவு ரன்களை கசிய விட்டார்.

- Advertisement 2-

இந்நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த ஆர்ச்சருக்கு 8 கோடியா? என்று கிண்டல் செய்து வருகின்றனர். அதோடு ஒரு விக்கெட்டுக்கு 4 கோடி என இவருக்கு போயி பெரிய தொகையை கொடுத்து விட்டீர்களே. இவருக்கு பதிலாக வேறு யாரையாவது வாங்கியிருக்கலாம் என ரசிகர்கள் சாடி வருகின்றனர். அதேபோன்று ஆர்ச்சருக்கு பதிலாக இந்த தொடரின் பாதியில் மாற்று வீரராக வாங்கப்பட்ட கிரிஸ் ஜோர்டான் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 56 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்